செய்திகள்

வாகனத்திலிருந்து கொட்டப்பட்ட மண்ணில் புதையுண்டு குடும்பஸ்தர் பலி!

மன்னார் குஞ்சுக்குளம் பகுதியில் மண் அகழ்வில் ஈடுபட்ட குடும்பஸ்தர் ஒருவர் கொட்டப்பட்ட மண்ணுக்குள் சிக்கி உயிரிழந்த சம்பவம் சிலாபத்துரை பகுதியில் நேற்று திங்கட்கிழமை(3) இரவு இடம் பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய...

பொலிஸார் கொலை; மேலுமொரு முன்னாள் போராளி கைது!

வவுணத்தீவு காவல் நிலையத்தில் கடமையாற்றிய இரண்டு பொலிஸார் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில், விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளை இலக்கு வைத்து இலங்கை காவல்துறை வேட்டையாடிவருகின்றது. அவ்வகையில் மற்றுமொரு முன்னாள் போராளி சந்தேகநபராக கைதுசெய்யப்பட்டுள்ளார். நேற்று...

சமூர்த்தி வங்கியின் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் மீது வாள்வெட்டு !

யாழில் சமூர்த்தி வங்கியின் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. யாழ்.வடமராட்சி துன்னாலை பகுதியில் உள்ள சமூர்த்தி வங்கியில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த வங்கி உத்தியோகஸ்தர் மீதே வாள் வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு...

ஆவா குழு என அடையாளப்படுத்தப்பட்ட இருவருக்கு தலா 6 மாதங்கள் கடூழியச் சிறை

யாழ்ப்பாணம் கொக்குவில் சந்தியிலுள்ள இரும்பகம் ஒன்றுக்குள் புகுந்து  அடாவடியில் ஈடுபட்ட ஆவா குழு என பொலிஸாரால் அடையாளப்படுத்தப்பட்ட இருவருக்கு தலா 6 மாதங்கள் கடூழியச் சிறைத் தண்டனை வழங்கி யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான்...

யாழ்.கொழும்புத்துறை பகுதியில் வாள் வெட்டு குழு அட்டகாசம்!

யாழ்ப்பாணம் - கொழும்புத்துறை இலந்தைக்குளம் பகுதியில் இன்று அதிகாலை வாள்வெட்டுக்குழு அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளது. அந்தப்பகுதியில் உள்ள வீடுகளின் கேற்,  வேலிகள் மற்றும் வீதியோரத்தில் இருந்த தண்ணீர்க் குழாய்கள், வீதித் திருத்தப்பணிக்காக வைக்கப்பட்டிருந்த தார் பரல்கள்...

உடுவிலில் மூதாட்டி மீது கொடூர தாக்குதல் ; இரண்டு கைகளும் அடித்து உடைப்பு

தனிமையில் வாழ்ந்த மூதாட்டியை வீடு புகுந்து கடுமையாகத் தாக்கிய கும்பல், அங்கிருந்து தப்பித்தது. படுகாயமடைந்து மூதாட்டியை குருதி வெள்ளத்திலிருந்த மீட்ட மகள், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பித்தார். உடுவிலில் இன்று அதிகாலை 2 மணியளவில் இந்தச்...

ஒதிய மலை படுகொலை நினைவேந்தல்

ஒதிய மலை பகுதியில் 32 அப்பாவித்தமிழ்மக்கள் கடந்த 1984.12.02 அன்று மிலேச்சத்தனமான முறையில் படுகொலை செய்யப்பட்டனர். அந்த படுகொலை நாளினுடைய நினைவுதினம் ஆண்டு தோறும் டிசம்பர் மாதம் இரண்டாம் திகதி நினைவு கூரப்படுகிறது. அந்த வகையில்...

வீதியில் சோதனை சாவடிகள் மீண்டும் முளைக்கும்-யாழ்.மாவட்ட கட்டளைத்தளபதி

தமிழ் மக்கள் அமைதியான வாழ்வை விரும்பாவிடின் மீண்டும் இராணுவத்தினரும் , பொலிசாரும் வீதிகளில் சோதனை சாவடிகளை அமைத்து சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என யாழ்.மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல்...

கோப்பாய் பொலிசார் கடும் சித்திரவதை ; கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சித்த இளைஞன்!

கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் சட்டவிரோதமாகத் தடுத்துவைக்கப்பட்டு சித்திரவதைக்குள்ளான இளைஞன், கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனக்கு நடந்த கொடுமைகளை அந்த இளைஞர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் கண்ணீர் மல்கத்...

மட்டு.பொலிஸ் கொலை – பின்னணியில் கருணா?

- ஜ.தே.க குற்றச்சாட்டு மட்டக்களப்பு, வவுணதீவில் – பொலிஸ் அதிகாரிகள் இருவர் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்துடன் கருணா அம்மானும் தொடர்புபட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுகின்றது. எனவே, இது தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்தப்படவேண்டும்...