SHARE
புதிய ஆய்வு அறிக்கையில் தகவல்; பாதுகாப்பு தரப்பினர் மீது குற்றச்சாட்டு

கடந்த 26 மாதங்களில் இலங்கையில் 50 ஆட்கடத்தல் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக ஆய்வு அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. பெரும்பாலனா தமிழர்களே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளதாகவும் இவற்றிற்கு பாதுகாப்பு தரப்பினர் மீதே குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இவை யுத்தம் முடைவடைந்து 7 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் 2016இ 2017 மற்றும் நடப்பாண்டின் (2018) முதல் பாதியிலேயே நடைபெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆட்கடத்தல் காணமல் ஆக்கப்படுதல் சட்டவிரோத கொலை மற்றும் கற்களிப்புக்கள் தொடர்பில் இலங்கை ஜனநாயகத்திற்கான ஊடகம் வெளியிட்டுள்ள “Inconvenient truths: The newspapers they didn’t read”  எனும் ஆய்வு அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாட்சியங்களிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையிலேயே இந்த ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் ஊடகங்களிற்கு வெளிவராத பல சம்பவங்கள் இன்னும் இருப்பதாக அவர்கள் நம்புவதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளனர்.

இதனிடையே இந்ந அறிக்கையில் இடம்பெறாத நீங்கள் அறிந்துள்ள கடத்தல் சம்பவங்கள் குறித்து கீழ்வரும் மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்துமாறு அதில் கோரப்பட்டுள்ளது. info@jdslanka.org

Print Friendly, PDF & Email