SHARE
-எம். கே. சிவாஜிலிங்கம்

தமிழ் மக்கள் நம்பி ஏமாந்த கடைசித் தலைவராக மைத்திரிபால சிறிசேனவே இருப்பார் என்பதை வரலாறு சுட்டிகாட்டும் என்று வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆற்றியுள்ள உரை தொடர்பில் கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்ட மக்கள் தொடர்பாகவே பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவது தொடர்பாகவோ ஜனாதிபதி மூச்சுக் கூட வில்லை என்றும் அவர் அவர் கூறியுள்ளார்.

அத்துடன், இலங்கையில் போர் வேண்டாம் என்று கூறியுள்ள ஜனாதிபதி போருக்காக காரணி, தேசிய இனப்பிரச்சினை என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்று சுட்டிக்காட்டியதுடன், பலஸ்தீன மக்களின் பிரச்சினையை தீர்க்க ஆதரவு அளிப்பதாக கூறும் ஜனாதிபதி எமது பிரச்சினையை தீர்க்க ஏன் தயங்குகிறார் என்றும் கேள்வி எழுப்பினார்.

எமது பிரச்சினையை தீர்க்க வெளிநாட்டு தலையீடு தேவையில்லை என்று கூறும் மைத்திரி எமது பிரச்சினையை நாமே தீர்க்க அனுமதிப்பாரா? என்று கேள்வி எழுப்பிய சிவாஜிலிங்கம், இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை மற்றும் வடக்கு கிழக்கு பொதுசன வாக்கெடுப்பு முதலிய விடயங்களில் தமிழ் மக்கள் தம்மை தாமே தீர்மானிக்க இடமளிக்கப்படவேண்டும் என்றும் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Print Friendly, PDF & Email