SHARE

அரசியற் கைதிகளின் விடுதலையை வலியுறுத்துகின்ற யாழ்.மாவட்ட வெகுஜன அமைப்புக்களும், அரசியற் கட்சிகளும் இணைந்து இன்று சனிக்கிழமை யாழ். நகரில்  கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தையும், பேரணியையும் முன்னெடுத்தன.

கொட்டும் மழையிலும் நடைபெற்ற இக்கவனயீர்ப்புப் போராட்டத்தில் பொதுமக்கள், பொது அமைப்புகள், அரசியல் கட்சிகள் எனப் பலரும் கலந்துகொண்டு அரசியல் கைதிகளின் நியாயமான கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

முற்பகல் 11.30 மணியளவில் யாழ். பிரதான பஸ் தரிப்பிட நிலையத்திற்கு முன்பாக ஆரம்பமான இக்கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் பின்னர் அங்கிருந்து பேரணியாகப் புறப்பட்டு ஆஸ்பத்திரி வீதி வழியாக யாழ்.நகரின் மத்திய தனியார் பஸ் தரிப்பிடத்தைச் சென்றடைந்தது மீண்டும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஆரம்பமான இடத்தை வந்தடைந்தது.

இதில் கலந்து கொண்டவர்கள் “அனைத்து அரசியல் கைதிகளையும் விரைவாக விடுதலை செய்”, “உண்ணாவிரதமிருக்கும் அரசியற் கைதிகளின் உயிர்களைப் பறிக்காதே”, “கூட்டாட்சி அரசே கொடுத்த வாக்குறுதி என்னவாச்சு!”, ” வாய்ப்பேச்சில் நல்லிணக்கம்/வதைப்பது அரசியற் கைதிகளையா?”, “பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்” உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை கடும் ஆதங்கத்துடனும், ஆக்ரோஷத்துடனும் எழுப்பியமையும் குறிப்பிடத்தக்கது.

Print Friendly, PDF & Email