SHARE
தமிழ் இளையோருடனான சந்திப்பில் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் ROSIE  DUFFIELD உறுதி

இலங்கையுடனான ஆயுத விற்பனையை நிறுத்தக்கோரி பிரித்தானிய நாடாளுமன்றில் கொண்டுவரப்படவுள்ள முன்பிரேரணைக்கு ஆதரவு வழங்குவதாக உறுதியளித்துள்ள அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் Rosie Duffield, தமிழ் மக்களுடன் இணைந்து செயலாற்ற விருப்பம் தெரிவித்துள்ளார்.

Canterbury தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான Rosie Duffield ஜ நேற்று சந்தித்திருந்த செயற்பாட்டாளர்களான கோகுலகிருஷ்ணன் நாராயணசாமி, ஜனகன் கிருஷ்ணமூர்த்தி, இராகவன் இராசலிங்கம், சயந்தன் குலச்சந்திரதாசன் மற்றும் மயூரன் தாமோதரம்பிள்ளை ஆகியோர் தமிழர் மீதான இன அழிப்பை செய்து வரும் இலங்கை அரசுக்கு பிரித்தானியா ஆயுதங்களை விற்பனை செய்வதை நிறுத்த வலியுறுத்த வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்திருந்தனர்.

இந்நிலையிலேயே அவர்களுடனான கலந்துரையாடலில் இலங்கைக்கான ஆயுத விற்பனையை தடைசெய்ய சம்பந்தப்பட்ட அமைச்சுக்களை வலியுறுத்துவதாக தெரிவித்த Rosie Duffield, குறித்த விவகாரம் தொடர்பில் நாடாளுமன்றில் முன்பிரேரணை கொண்டுவரப்படும் போது அதற்கு ஆதரவு வழங்குவதாகவும் உறுதியளித்துள்ளார்.

அதேவேளை பிரித்தானியா வாழ் தமிழ் மக்களுடன் இணைந்து தனது கட்சிசார்ந்த பணிகளை முன்னெடுத்து செல்லவும் அவர்களுடன் பணியாற்றவும் தான் விருப்பம் கொண்டுள்ளதாகவும் குறித்த சந்திப்பின் போது செயற்பாட்டு குழுவினரிடம் அவர் தெரிவித்துள்ளார்.

Print Friendly, PDF & Email