SHARE

யாழ். வல்வெட்டித்துறை தீருவில் பகுதியில் நிர்மாணிக்கப்படவிருந்த குமரப்பா புலேந்திரன் உள்ளிட்ட 12 போராளிகளின் நினைவுத்தூபி அமைக்கும் பணியை நிறுத்தகோரி ஒரு தொகுதியினரால் நடத்தப்பட்ட எதிர்ப்பு ஆர்பாட்டத்தினையடுத்து குறித்த நிர்மாணப்பணி இடைநிறுத்தப்பட்டுள்ளது.

வல்வெட்டித்துறை தீருவில் பகுதியில் விடுதலைப்புலி உறுப்பினர்களான குமரப்பா புலேந்திரன் உள்ளிட்ட 12 போராளிகள் நினைவாக ஏற்கனவே இருந்து அழிக்கப்பட்ட நினைவு தூபியை புனரமைப்பதுடன்இஏனைய சகல போராளிகளுக்கும் சேர்த்து பிறிதொரு தூபியை அருகில் அமைப்பது என வல்வெட்டித்துறை நகரசபையில் தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டிருந்தது

இதற்கு அமைவாக இன்று இந்த தூபிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு வடமாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் மற்றும் வல்வெட்டித்துறை நகரசபைத்தலைவர் கருணாநந்தராசா தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது குறித்த நகரசபையின் எதிர்த்தரப்பு உள்ளிட்ட சுமார் 10 மேற்பட்ட குழுவினர் நிர்மாணப்பணி இடம்பெற்ற பகுதிக்கு சென்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடபட்டனர்.

விடுதலைப்புலி உறுப்பினர்களை மட்டும் நினைவு கூறும் இப்பகுதியில் சிவா சிவாஜிலிங்கம் தலைமையிலான குழுவினரால் சகல இயக்கங்கiளையும் நினைவுகூறும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே புலிகளுக்கு தூபி அமைக்கப்படுவதாக கூறி பொலிஸார் நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு சென்றதுடன் நிர்மாணப்பணியை நிறுத்துமாறும் நீதிமன்றின் அழைப்பு கட்டளை ஒன்றையும் பெற்றுகொண்டு சம்பவ இடத்திற்கு வந்திருந்தனர்.

இதற்கமைய நீதிமன்றில் பெறப்பட்ட அழைப்பு கட்டளையை சிவாஜிலிங்கம் மற்றும் நகரசபை தலைவரிடம் கொடுக்க முற்பட்டனர். ஆதனை அவர்கள் பெற்றுகொள்ள மறுத்ததும் அவ்விடத்தில் பொலிஸாரால் குறித்த கடிதம் வாசித்து காண்பிக்கப்ட்டது.

இதன் போது சிவாஜிலிங்கம் மற்றும்; நகரசபைத்தலைவர் கருணாநந்தராசா ஆகியோர் தமது காதுகளை பொத்திக்கொண்டு நின்றதாக தெரிவிக்கப்படுகிறது.

Print Friendly, PDF & Email