SHARE
ஒக்ஸ்போர்ட் யூனியன் முன்னாள் திரளவுள்ள புலம்பெயர் தமிழர்

லண்டன் ஒக்ஸ்போர்ட் யூனியனில் உரையாற்றவுள்ள பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவுக்கு எதிராக பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று திங்கட்கிழமை (8) நடைபெறவுள்ளது.

பிரித்தானியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அவர் இன்று மாலை 20.00 மணிக்கு லண்டன் ஒக்ஸ்போர்ட் யூனியனில் இந்து சமுத்திர பிராந்தியத்தின் புவிசார் அரசியல் தொடர்பில் உரையாற்றவுள்ளார்.

இந்நிலையிலேயே ஒக்ஸ்போர்ட் யூனியனில் உரையாற்றவுள்ள போர் குற்றவாளியான பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவுக்கு எதிராக யூனியனுக்கு முன்னால் புலம்பெயர் தமிழர்களால் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் மாலை 19.00 மணிமுதல் நடைபெறவுள்ள இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பிரித்தானியா வாழ் புலம்பெயர் தமிழர்கள் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை ஒக்போர்ட் யூனியனுக்கு ரணிலின் நிகழ்வை நிறுத்துமாறு கோரி ஏராளமான மின்னஞ்சல்களும் அனுப்பப்ட்டு வருகின்றது.

நேற்றய தினம் லண்டன் வருகை தந்திருந்த வடமாகாண ஆளுனர் ரெஜினோல் குரேவுக்கு எதிராக புலம்பெயர் தமிழர்களால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டிருந்த நிலையிலேயே என்று பிரமதமருக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

தமிழ் மக்களுக்கு எதிராக பாரிய இனப்படுகொலை புரிந்த இலங்கை இராணுவத்தினரை யுத்தக்குற்றசாட்டிலிருந்து காப்பாற்றிவரும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கஇ தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யாது நாட்டின் பிரதமர் என்றவகையில் அது குறித்து எந்த நடவடிக்கைகளையும் எடுக்காது மௌனம் காத்துவருகிறார். தவிரஇ காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் இதுவரையில் எந்தவொரு தீர்வினையும் வழங்கவில்லை.

இதனிடையே கடந்த 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பொங்கல் விழா ஒன்றில் கலந்து கொண்ட அவர் அங்கு தனது உரையின் போது ‘ 2009 ஆம் ஆண்டு இறுதிப்போரில் பாதுகாப்பு படையினரிடம் சரணடைந்தவர்கள் எவரும் உயிருடன் இல்லை என தெரிவித்திருந்தார். எனினும் சரணடைந்தவர்கள் உயிருடன் இல்லையெனில் அவர்கள் கொல்லப்பட்டார்களா? அல்லது என்ன ஆனார்கள் என்பது தொடர்பில் ரணில் எந்தவொரு கருத்தையும் சொல்ல மறுத்துவருவதுடன் இலங்கை படையினரை யுத்தக்குற்றச்சாட்டிலிருந்து பாதுகாத்து வருகிறார்.

இந்நிலையிலேயே இன்று ஒக்ஸ்போர்ட் யூனியனில் உரையாற்றவுள்ள ரணிலுக்கு எதிராக புலம்பெயர் தமிழர்காளல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது.

இலங்கையின் முன்னால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இதே போல் கடந்த 2010 ஆம் ஆண்டு ஒக்ஸ்போர்ட் யூனியனில் உரையாற்றுவதற்காக வந்திருந்த போது புலம்பெயர் தமிழர்களின் பாரிய எதிர்ப்பு நடவடிக்கையையடுத்து அவரது நிகழ்வு இரத்து செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Print Friendly, PDF & Email