SHARE

இலங்கை பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவுக்கு எதிராக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் விளையாட்டு மற்றும் சமூகநல பிரதி அமைச்சர் சொக்கலிங்கம் யோகலிங்கம் உட்பட அதன் செயற்பாட்டாளர்கள் மூவர் பிரித்தானிய பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை உயர்தானிகர் ஒருவர் வேண்டுமென்றே வழங்கிய தவறான தகவலின் அடிப்படையிலேயே பிரித்தானிய பொலிஸார் இந்த அடாவடியான கைது நடவடிக்கையை செய்துள்ளனர்.

லண்டன் வந்துள்ள பிரதமர் ரணில் விக்கிரம சிங்க இன்று மாலை ஒக்ஸ்போர்ட் யூனியனில் உரையாற்றினார். இதனை எதிர்த்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் ஒக்ஸ்போர்ட் யூனியனுக்கு முன்னாள் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது.

இந்நிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமிழீழ தேசியக் கொடியினை ஏந்திய படி தமிழின படுகொலை சிங்கள பிரதமரே வெளியேறு என்றவாறு கோசமெழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேவேளை அங்கு வந்திருந்த இலங்கை உயர்தானிகர் ஒருவர் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த பொலிஸாருக்கு பாயங்கரவாதிகளின் கொடியினை ஏந்தியுள்ளார்கள் என வேண்டுமென்ற தவறான தகவலை வழங்கினார்.

இதனையடுத்து பிரித்தானிய பொலிஸாரும் எமது தேசிய கொடிகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை அடாவடியாக கைது செய்துள்ளனர்.

மக்களால் அங்கீகரிக்கப்பட்ட, மக்கள் ஆணை பெற்ற தமிழீழ தேசியக் கொடிக்கு பிரித்தானியாவில் தடை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. தமிழீழ தேசியக்கொடி மட்டுமன்றி விடுதலைப்புலிகளின் கொடி கூட பிரித்தானிய சட்டத்தின் கீழ் தடைசெய்யப்படவில்லை. இந்நிலையிலேயே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

Print Friendly, PDF & Email