SHARE

போர்க்கால குற்ற மீறல்களுக்கும் பொறுப்புக்கூறும் பொறிடுமுறைக்கும் அனைத்துலக தலையீடு அவசியமில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

அதேவேளை இலங்கையில் தொடரும் சித்திரவதைகள் குறித்து எழுப்பட்ட கேள்விக்கு பதிலேதும் கூறாது நழுவியுள்ளார்.

லண்டனுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா பிரதமர் ரணியில் விக்கிரம சிங்க நேற்ற தினம் ஒக்ஸ்போர்ட் யூனியனில் சிறப்புறை ஒன்றினை நிகழ்த்தியிருந்தார்.

இதன்போதே போர்க்குற்ற விசாரணைகளில் அனைத்துலக தலையீட்டின் அவசியத்தை தாம் உணரவில்லை என பிரதமர் தெரிவித்துள்ளார். இதேவேளை ITJP வெளியிட்டிருந்த அறிக்கையை மேற்கோள் காட்டி இலங்கையில் தொடரும் சித்திரவதைகள் குறித்து அவரிடம் கேள்விய எழுப்பியிருந்த போது அதற்கு பதிலேதும் அளிக்காது நழுவிய அவர் வடக்கு கிழக்கில் உள்ள தமிழர்கள் இராணுவத்தை விரும்புவதாகவும் அப்பட்டமாக உண்மைக்கு புறம்பான கருத்தை கூறினார்.

Print Friendly, PDF & Email