SHARE

கோண்டாவில் புகையிரத வீதியில் அமைந்துள்ள ஞானவீர சனசமூக நிலையத்திற்கு அருகாமையில் உள்ள பலசரக்கு கடை மீது வாள்வெட்டுக் கும்பல் ஒன்று தாக்குதலை மேற்கொண்டுவிட்டு தப்பி சென்றுள்ளது.

இந்தச் சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை 6.45மணியளவில் நடைபெற்றது.

இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த இனந்தெரியாதவர்களே இந்தத் தாக்குதலை நடத்திவிட்டுத் தப்பி சென்று உள்ளனர் என பொலிஸாரின் விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

சம்பவத்தையடுத்து அங்கு பதற்றமான சூழ்நிலை காணப்படுகிறது.

கோப்பாய் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து சம்பவ இடத்துக்கு வருகை தந்த கோப்பாய் பொலிஸ்  நிலைய பொறுப்பதிகாரி, விசாரணைகளை மேற்கொண்டார்.

அத்துடன் அந்தப் பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிபடையினர் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

அதேவேளை இன்றைய தினம் காலை முதல் கொக்குவில் , கோண்டாவில் பகுதிகளை சூழவுள்ள பகுதிகளில் பொலிஸ் விசேட அணியினர் சுமார் 150 பேர் களமிறக்கப்பட்டு வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் சந்தேக நபர்கள் 21 பேரின் வீடுகள் சோதனையிட ப்பட்டதுடன் , மூவரை கைது செய்திருந்தனர்.

குறித்த சுற்றிவளைப்பு சோதனை நடவடிக்கைகளை முடித்துக்கொண்டு பொலிசார் திரும்பிய சில மணிநேரத்தில் பொலிசார் சுற்றிவளைப்பு தேடுதல் நடத்திய பகுதியில் வாள் வெட்டு குழு வன்முறையில் ஈடுபட்டமை மக்கள் இடையே ஒருவித பயத்தை ஏற்படுத்தி உள்ளது.

Print Friendly, PDF & Email