SHARE

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்.பல்கலை மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட நடைபவனி அநுராதபுரதம் நகரத்தை சென்றடைந்துள்ளது.

இன்று காலை மதவாச்சியிலிருந்து புறப்பட்ட மாணவர்களின் நடைபயணம் மதியம் அளவில் அனுராதபுரம் நகரை அடைந்துள்ளது.

இதனிடையே முன்னர் சொல்லஇப்பட்டது போல் யாழ் பல்கலைக்கழக மாணவர்களுடன் இன்று கிழக்கு பல்கலைக்கழக மாணவர் சமூகமும் பயணத்தில் இணைந்து கொண்டனர். துவிர அரசியல் கைதிகள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சிவில் அமைப்புக்கள் அரசியல் பிரமுகர்கள் என பலரும் இன்று இறுதி நடை பணியில் இணைந்து கொண்டனர்.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் 5 ஆவது நாளாக தொடரும் இந்த மாபெரும் நடைபயணம் இன்று மாலை அனுராதபுர சிறைச்சாலையை சென்றடையும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. அங்கு அவர்கள் போராட்டத்திலீடுபட்டுள்ள அரசியல் கைதிகளை சந்தித்து தமது ஆதரவை வெளிப்படுத்துவதுடன் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட கோருவதுடன் தாம் அதனை பொறுப்பேற்பது தொடர்பிலான உறுதி உரையினை வழங்குவரென எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை இன்று அனுராதபுரத்தில் இராணுவ பிரசன்னம் அதிகப்படுத்தப்ப்டுள்ளதுடன் வீதிகள் எங்கும் ஆயுதம் ஏந்திய இராணுவத்தினர் ஆங்காங்கே நிலைகொண்டு கண்காணிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.

Print Friendly, PDF & Email