SHARE

அரசியல் கைதிகளின் விடுதலைக்காக அனுராதபுரம் நோக்கி நடைபயணம் மேற்கொண்ட யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் சற்றுமுன்னர் அனுராதபுர சிறைச்சாலையிலுள்ள அரசியல் கைதிகளை சந்தித்தனர்.

வெயில் மழை உடல் சோர்வு காயங்கள் என வழிநெடுக பல தடைகளை சந்தித்திருந்த போதிலும் மன உறுதி தளராத அவர்கள் 5 ஆவது நாளான இன்று தமது இலக்கை அடைந்துள்ளர்.

காரணமெதுவுமின்றியும் தீர்வுகள் வழங்கப்படாத நிலையிலும் நெடுகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தமது விடுதலையை வலியுறுத்தி சிறைச்சாலைக்குள் உணவுதவிர்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்நிலையில் அவர்களின் இந்த போராட்டத்தை வெளி உலகிற்கு கொண்டுவரும் நோக்கிலும் நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ள அவர்களை நிபந்தனைகளற்ற பொது மன்னிப்பில் விடுதலை செய்ய வேண்டியும் யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் அனுராதபுர சிறைச்சாலை நோக்கிய நடைபயணம் கடந்த 9 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

யாழ் பல்கலைக்ழகத்திலிருந்து ஆரம்பமான இந்த நடைபயணம் கிளிநொச்சி மன்னார் வவுனியாக ஊடக பயணித்து 5 ஆவது நாளான இன்று அனுராத புரத்தினை அடைந்தது. இந்நிலையில் அனுராதபுர சிறைச்சாலையை அடைந்த மாணவர்கள் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் அரசியல் கைதிகளை சந்தித்தனர்.

Print Friendly, PDF & Email