SHARE
-இலங்கைக்கான ஆயுத விற்பனையை நிறுத்த கோரும் விவகாரம்

பிரித்தானியாவின் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் Gordon Henderson ஜ சந்தித்த புலம்பெயர் வாழ் தமிழ் இளையோர் குழுவொன்று இலங்கைக்கான ஆயுதவிற்பனையை பிரித்தானியா நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்துள்ளனர்.

Sittingbourne and Sheppey தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான அவரை நேற்ற தினம் சந்தித்திருந்த நிருஷன் விக்னேஸ்வரன் தலைமையிலான கஜானன் ஞானசேகரம், மயூரன் தாமோதரம்பிள்ளை ஆகியோரே மேற்படி விவகாரம் குறித்து பிரித்தானிய அரசுக்கு அழுத்தம் கொடுக்குமாறு கோரியுள்ளனர்.

இதனையடுத்து குழுவினரின் கோரிக்கை தொடர்பில் வெளிவிவகார அமைச்சுக்கு அறியப்படுத்துவதாக தெரிவித்த அவர் பாராளுமன்ற விவாதத்தின் போதும் ஆதரவளிப்பதாக கூறியுள்ளார்.

அதேவேளை, தொடர்ச்சியாக ஆயுதக்கொள்வனவு செய்துவரும் இலங்கை அரசு நிகழ்த்திவரும் இனப்படுகொலை குறித்த விவரங்கள் அனைத்தையும் உள்ளடக்கிய நூல் ஒன்டறினையும் இதன்போது குழுவினர் நாடாளுமன்ற உறுப்பினருக்கு கையளித்தனர்.

இலங்கை அரசுக்கு பிரித்தானியா தொடர்ந்தும் ஆயுதங்களை விநியோகிப்பதை நிறுத்த செய்வதற்கான தொடர் செயற்பாடுகளில் பிரித்தானியா வாழ் புலம்பெயர் தமிழ் இளையோர் தமிழ் தகவல் நடுவத்தின் ஏற்பாட்டிலும் சட்டவாளர் கீத் குலசேகரத்தின் வழிப்படுத்தலிலும் அதிதீவிரமாக ஈடுபட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

Print Friendly, PDF & Email