SHARE


இறுதியுத்தத்தில் இலங்கை படையினரிடம் சரணடைந்த மற்றும் கைது செய்யப்பட்ட பெண் போராளிகள் மற்றும் பொதுமக்கள் என பலர் இலங்கை இராணுவத்தினரால் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டனர் என்ற குற்றச்சாட்டு பலமாக உள்ள நிலையில் தற்போது உலகம் முழுவதிலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள  ருவிட்டர் பகிர்விலும் இலங்கை இராணுவத்தினர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் குறித்து உலகம் முழுவதிலும் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திவரும் விவகாரம் இந்திய அளவிலும் பல பிரபலங்களின் தூக்கத்தை கெடுத்துள்ளது.

இது இலங்கையில் குறிப்பிடத்தக்க அளவு தாக்கத்தை இதுவரையில் ஏற்படுத்தியிராத நிலையில் தற்போது அம்சவல்லி என்ற ருவீட்டர் பதிவாளர் வில் இலங்கை இராணுவத்தினருக்கு எதிரான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

அதில் உசாளினி என்ற பெண்போராளி இறுதி யுத்தத்தின் போது பொது மக்களுடன் சேர்ந்து இராணுவத்தினரிடம் சரணடைந்திருந்தார் எனவும். அவ்வாறு சரணடைந்த அவர் அப்போது பாதுகாப்பு செயலராக இருந்த கோத்தபாயவின் உத்தரவின் பெயரில் 58 ஆவது படைப்பிரிவினரால் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொடூரமாக கொலைசெய்யப்பட்டார் என தனது பகிர்வில் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, மற்றுமொரு ருவிட்டர் பதிவாளரும், இறுதி யுத்தத்தில் சரணடைந்த பல தமிழ் பெண்கள் இராணுவத்தினரால் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டனர் என தொடர்பில் இலங்கை இராணுவத்தினர் மீது குற்றம் சுமத்தியுள்ளார்.

பாலியல் வன்கொடுமைகள் குறித்து இறுதிப்போர் மற்றும் ஐ.நா. அமைதிகாக்கு படைக்கான இலங்கை வீரர்கள் என இலங்கை இராணுவத்தினர் மீது ஏற்கனவே பல குற்றச்சாட்டுக்கள் அடுக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது வும் இலங்கை இராணுவத்திற்கு நெருக்கடியை எற்படுத்தியுள்ளது.

Print Friendly, PDF & Email