SHARE

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 18வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை அனுஸ்டிக்கப்பட்டது.

கடந்த  2000ம் ஆண்டு ஒக்டோபர் 19ம் திகதி இரவு யாழ்.குடாநாட்டின் முன்னணி ஊடகவியலாளர் நிமலராஜன் தனது வீட்டில் வைத்து சுட்டுப்படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில் யாழ்.பிரதான வீதியில் நீதிமன்ற கட்டடத்தொகுதிக்கு அருகில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவாக கட்டப்பட்டு உள்ள நினைவு தூபியில் இன்று அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றன.
அதனை தொடர்ந்து இராசாவின் வீதியில் உள்ள யாழ்.ஊடக அமையத்தில் நினைவுரைகள் ,இடம்பெற்றன.
இதேவேளை, யாழ் பல்கலைக்கழகத்திலும் நிமலராஜனுக்கு அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றன. அதில் பல்கலைகழக துணைவேந்தர் பேராசிரியர் இ. விக்னேஸ்வரன் இ ஊடக கற்கைகள் துறை தலைவர் கலாநிதி சி. ரகுராம் இ ஊடக கற்கை விரிவுரையாளர்கள் இ மாணவர்கள் சுடரேற்றி மலரஞ்சலி செலுத்தினார்கள்.
Print Friendly, PDF & Email