SHARE

வடக்கு மாகாணசபையின் 5 வருட ஆட்சியின் ஆயுட்காலம் எதிர்வரும் 25 ஆம் திகதி முடிவுக்கு வரும் நிலையில் அரசு தனது ஆட்சியை ஆளுநர் ஊடாக முன்னெடுக்க கடும் முனைப்பில் ஈடுபட்டு வருகின்றது.

இந்நிலையில் சகல ஆளுனர்கள் மற்றும் பிரதம செயலாளர்கள் அனைவரையும் விசேட கலந்துரையாடலுக்காக ஜனாதிபதி செயலகம் அவசர அவசரமாக நாளை மறுதினம் (22) கொழும்புக்கு அழைத்துள்ளது.

இதேவேளை, ஆளுநரது ஆட்சி ஆரம்பமானதும் அடுத்த வடமாகாணசபை தேர்தலை பிற்போடுவதன் மூலம் குறிப்பிட காலத்திற்கு ஆளுநர் ஆட்சியை வடக்கில் தொடர அரசு திட்டமிட்டுள்ளதாக தெரியவருகின்றது. இதன் தொடர்ச்சியாகவே ஆளுநர் றெஜினோல்ட் குரேயின் அண்மைக்கால வெளிநாட்டு பயணங்கள் அமைந்திருந்ததாக கூறப்படுகிறது.

இதேவேளை, இவ்வாண்டின் நடுப்பகுதியிலேயே வடமாகாண ஆளுநர் தனது புகைப்படத்தினை அச்சிட்டு வடமாகாண அலுவலகங்களில் தொங்கவிடுமாறு பணித்திருந்தார். எனினும் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட முதலமைச்சர் ஆட்சிக்காலத்தில் ஆளுநரது புகைப்படத்தினை தொங்கவிட் பெரும்பாலான அதிகாரிகள் மறுத்திருந்தனர்.

இந்நிலையில் தற்போது எதிர்வரும் 25 ஆம் திகதியுடன் ஆளுநரது படங்களை தொங்கவிடுமாறு ஆளுநர் அலுவலகம் பணிப்புரைகள் விடுத்துள்ளதாக தெரியவருகின்றது.

Print Friendly, PDF & Email