SHARE

யாழில்.இருந்து தற்போது போதை மாத்திரைகள் கடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றன. இதுவரை காலமும் யாழில்.இருந்து தென்பகுதிகளுக்கு கேரளா கஞ்சா கடத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது போதை மாத்திரைகளும் கடத்தப்படுகின்றன.

யாழில் இருந்து தென்பகுதிக்கு ஆடம்பர காரில் போதை மாத்திரைகளை கடத்திய சுன்னாகம் பகுதியை சேர்ந்த இருவரை பொலிசார் கைது செய்ததுடன் , அவர்களிடம் இருந்து 2 ஆயிரத்து 600 போதை மாத்திரைகளையும் பொலிசார் மீட்டு உள்ளனர்.

யாழில்.இருந்து தென்பகுதிக்கு ஆடம்பர காரில் போதை மாத்திரை கடத்தப்படுவதாக ஓமந்தை பொலிசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நேற்றைய தினம் மாலை பொலிசார் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்தனர்.

அந்நிலையில் யாழில் இருந்து சென்ற ஆடம்பர காரை மறித்து சோதனையிட்ட போது காரினுள் இருந்து 2 ஆயிரத்து 600 போதை மாத்திரைகளை கைப்பற்றினார்கள் அதனை அடுத்து காரில் இருந்த இருவரையும் கைது செய்தனர்.

அதேவேளை கடந்த வெள்ளிக்கிழமை யாழில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த தனியார் பேருந்தில் போதை மாத்திரை கடத்தப்படுவதாக ஓமந்தை பொலிசாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து , ஓமந்தை பகுதியில் குறித்த பேருந்தை மறித்து சோதனையிட்ட போது பயண பொதியில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த நிலையில் ஆயிரத்து 600 போதை மாத்திரைகளை பொலிசார் மீட்டிருந்தனர்.

அத்துடன் அதனை கடத்தினார் எனும் சந்தேகத்தில் திருகோணமலையை சேர்ந்த இளைஞன் ஒருவரையும் பொலிசார் கைது செய்திருந்தனர். என்பது குறிப்பிடத்தக்கது.

Print Friendly, PDF & Email