SHARE

இரா. சம்பந்தன்

தமிழ் மக்கள் சார்பாக ஆற்றவேண்டிய கடமையிலிருந்து நாம் தவறமாட்டோம் என எதிர்க்கட்சித்தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்பிற்கும் ஜே.வி.பி.யினருக்குமிடையே இன்று நடைபெற்ற விசேட சந்திப்பினையடுத்து ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்த போதெ அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நாட்டில் தற்போது நிலவிவரும் குழப்பநிலை அரசியல் சூழலில் பெரும்பான்மையை நிரூபிக்க ரணில் தரப்பினரும் மறுபக்கத்தில் மகிந்த தரப்பினரும் பெரும் முயற்சிகளை எடுத்து வரும் நிலையில் தமிழத்தேசிய கூட்டமைப்பு தீர்மானிக்கும் சக்தியாக மாறியுள்ளது.

இந்நிலையில் கூட்டமைப்பினருக்கும் ஜே.வி.பி.யினருக்குமிடையிலான விசேட சந்திபொன்று இன்று இடம்பெற்றது. இந்த சந்திப்பினையடுத்து கருத்து தெரிவித்த சப்ந்தன்,

“பதவி நீக்கம், புதிய பதவி நியமனம் இவையெல்லாம் அரசமைப்பு முரணான செயற்பாடுகள். இந்த செயல்கள் ஜனநாயகத்தின் இறையாண்மையை இல்லாமல் செய்கின்றது. இந்த செயல்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதால் இயன்றவரை இவற்றைத் தடுப்பது எமது கடமை. எம் மக்கள் சார்பாக நாம் ஆற்ற வேண்டிய கடமை. இதிலிருந்து நாம் தவறமாட்டோம்.

நாடாளுமன்றத்தை ஒத்தி வைத்துவிட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் விலைக்கொடுத்து வாங்கப்படுகின்றனர். இவ்விதமானச் செயல்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்தச் செயல்கள் தீவிரமடைந்தால் இந்த நாட்டில் ஜனநாயகம் நிலைக்காது என்பதே எமது நிலைப்பாடு“ எனத் தெரிவித்தார்.

இதேவேளை, கடந்த 26ம் திகதி நாட்டில் இடம்பெற்ற பிரதமர் மாற்றம் ஒரு அரசியல் சதி முயற்சியென குற்றம்சாட்டியுள்ள மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திசாநாயக்க. சதி முயற்சி ஊடாக அரசாங்கத்ததை அமைப்பதற்கும்இ சதி முயற்சி ஊடாக அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கும் இடமளிக்கப்படமாட்டாதென தெரிவித்துள்ளார்.

Print Friendly, PDF & Email