SHARE

முல்லைதீவில் திட்டமிட்டு வரும் நிலசுவீகரிப்பின் தொடர்ச்சியாக அடுத்து நந்திக்கடலை இலங்கை வனஜீவராசிகள் திணைக்களம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.

நந்திக்கடல் மற்றும் நாயாறு ஏரி என்பவையினை இயற்கை ஒதுக்கிடமாக அரசு அறிவித்துள்ளதுடன் வர்த்தமானி அறிவிப்பினையும் விடுத்துள்ளது.

இதன் தொடர்ச்சியாகவே தற்போது நந்திக்கடலில் வர்த்தமானி அறிவிப்பின் பிரகாரம் எல்லைகளை அடையாளப்படுத்தும் நடவடிக்கைகளில் வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்கள் ஈடுபட்டுள்ளனர்.

ஏற்கனவே வடமராட்சி கிழக்கு,மன்னார் என பல இடங்களிலும் வனஜீவராசிகள் திணைக்களம் பெருமளவிலான காணிகளை ஆக்கிரமித்துள்ளதுடன் மக்கள் அப்பகுதிகளில் நடமாடவும் தடை விதித்துள்ளது.

தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் முக்கியமான வகிபாகத்தை ஆற்றியிருந்த நந்திக்கடல் மற்றும் நாயாறு ஏரியினை இலக்கு வைத்து மக்கள் நடமாட்டத்திற்கு தடைபோடும் வகையில் அரசு தனது நகர்வுகளை முன்னெடுத்துவருவது குறிப்பிடத்தக்கது.

Print Friendly, PDF & Email