SHARE

மன்னார் மனிதப் புதைகுழியில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளில் மீட்கப்பட்ட 232 எலும்புக்கூடுகளில் 18 எலும்புக்கூடுகள் சிறுவர்களுடயது என சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

மன்னார் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணியானது நேற்று (07)102 வது நாளாகவும் இடம்பெற்றது. இது தொடர்பாக ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“102 வது தடவையாகவும் மனித எலும்புக்கூடுகள் அகழ்வுப்பணிகள் இடம்பெறுவதுடன், இதுவரை 232 மனித எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றுள் 224 மனித எலும்புக்கூடுகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளதுடன், எஞ்சியுள்ள மனித எலும்புக்கூடுகளை அப்புறப்படுத்தும் பணிகள் தொடர்சியாக இடம்பெற்று வருகின்றது.

கடந்த வாரத்தில் சந்தேகத்திற்கு உரிய விதமாக சில தடையப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அதில் மோதிரம் போன்ற ஒரு தடையப் பொருளும் மாபிளை ஒத்த ஒரு தடையப் பொருளும் கிடைக்கப் பெற்றுள்ளது” என்றார்

Print Friendly, PDF & Email