SHARE
ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் கேள்வி

ரணில் முகத்தை பார்க்க முடியாவிட்டால் ஜனாதிபதியினால் நாடாளுமன்றத்தை கலைக்க முடியுமா என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளமைக்கெதிராக இன்று(திங்கட்கிழமை) உயர் நீதிமன்றத்தில் ஐக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் சிவில் அமைப்புகளினால் 10இற்கும் அதிகமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்தநிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் அடிப்படை உரிமை மனுவினை உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும் போதே ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜனாதிபதி நாடாளுமன்றத்தை கலைத்துள்ளமை தொடர்பில் பல அரசியல் கட்சிகளும், சிவில் அமைப்புகளும் தொடர்ச்சியாக கடும் விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றன.

இதேவேளை, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பான பரிசீலனை நாளை காலை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Print Friendly, PDF & Email