SHARE

சாவகச்சேரி பிரதேச சபையின் தலைமை காரியாலயத்தின் முன்பாக மாட்டுடன் மோதுண்ட பாரவூர்தி குடை சாய்ந்துள்ளதுடன் மாடும் உயிரிழந்துள்ளது.

குறித்த விபத்தில் பாரவூர்தியின் சாரதி கால் முறிந்த நிலையில் மீட்கப்பட்டு சாவகச்சேரி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

கண்டி நெடுஞ்சாலையில் இன்று செவ்வாய்க்கிழமை காலை வீதியில் பாரவூர்தி சென்று கொண்டிருந்த சமயம் வீதிக்கு குறுக்காக மாடு ஓடிய போது மாட்டுடன் பாரவூர்தி மோதுண்ட மோது பாரவூர்தி குடை சாய்ந்துள்ளது. அதேவேளை மாடும் உயிரிழந்துள்ளது.

தென்மராட்சி பகுதிகளில் கண்டி நெடுஞ்சாலையில் கட்டாக்காலி மாடுகள் மற்றும் நாய்கள் வீதியை குறுக்கறுத்து ஓடுவதனால் பல விபத்து சம்பவங்கள் ஏற்பட்டு உயிரிழப்புக்களும் ஏற்பட்டு உள்ளன. அது தொடர்பில் பொதுமக்கள் பல தரப்பிலும் கோரிக்கை வைத்து வந்த நிலையில் , கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற தென்மராட்சி பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கட்டாகாலிகள் தொடர்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

குறித்த தீர்மானத்தில் கட்டாகாலிகளை பிடித்து கட்டுவது எனவும் அதன் பின்னர் அறிவித்தல் விடுக்கப்பட்டு அதன் உரிமையாளரிடம் தண்டம் அறவிடுவது எனவும் , அறிவித்தல் விடுக்கப்பட்ட கால எல்லைக்குள் உரிமை கோரப்படாத கட்டாகாலிகளை ஏல விற்பனையில் விற்பது எனவும் குறிப்பிடப்பட்டது.

குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டு சில மாதங்கள் கடந்தும் தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படவில்லை என குற்றம் சாட்டப்படுகின்றது.

Print Friendly, PDF & Email