SHARE
இடைக்காலத் தடையுத்தரவு அமுல்!

நாடாளுமன்றத்தைக் கலைத்தமைக்கு எதிராக, உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 13 அடிப்படை உரிமை மனுக்கள் தொடர்பான விசாரணைகளின் தீர்ப்பாக, ஜனாதிபதியின் தீர்மானத்துக்கு எதிராக, உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்தது.

இந்த இடைக்காலத் தடையுத்தரவு, எதிர்வரும் டிசெம்பர் மாதம் 18ஆம் திகதி வரை, இந்த இடைக்காலத் தடையுத்தரவு நீடிக்குமெனவும் நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலும் இரத்துச் செய்யப்படுமெனவும், பிரதம நீதியரசர் உள்ளிட்ட மூவரடங்கிய நீதியரசர்கள் குழாமால், இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகிய கட்சிகள் உயர் நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்திருந்தன.

Print Friendly, PDF & Email