SHARE

மன்னார் குஞ்சுக்குளம் பகுதியில் மண் அகழ்வில் ஈடுபட்ட குடும்பஸ்தர் ஒருவர் கொட்டப்பட்ட மண்ணுக்குள் சிக்கி உயிரிழந்த சம்பவம் சிலாபத்துரை பகுதியில் நேற்று திங்கட்கிழமை(3) இரவு இடம் பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

மடு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட குஞ்சுக்குளம் பகுதியில் நேற்று திங்கட்கிழமை (3) இரவு டிப்பர் ரக வாகனம் ஒன்றில் மண் ஏற்றுவதற்காக வாகனத்தின் சாரதியுடன் உதவியாளர்கள் 4 பேர் உற்பட 5 பேர் குஞ்சுக்குளம் சென்றிருந்தனர்.

இதனையடுத்து டிப்பர் வாகனத்தில் மண் ஏற்றிய பின்னர் குறித்த மண் சிலாபத்துறைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அதன் போது குறித்த வாகனத்தின் சாரதி மற்றும் மேலும் 3 உதவியாளர்கள் முன் இருக்கையில் இருந்துள்ளனர். 5 ஆவது நபர் டிப்பர் வாகனத்தில் மண் ஏற்றப்பட்ட பகுதிக்கு மேல் ஏறி படுத்துள்ளார்.

குறித்த வாகனம் குஞ்சுக்குளத்தில் இருந்து சிலாபத்துறை நோக்கி சென்ற நிலையில்இ சிலாபத்துறை பகுதியில் உரிய இடத்தில் மண் கொட்டப்பட்டுள்ளது என தெரிய வந்துள்ளது. இதன் போது மண் மீது எறி படுத்திருந்த நபரும் கொட்டப்பட்ட மண்ணுடன் சேச்ந்து விழுந்துள்ளார்.

பின்னர் குறித்த சாரதியும் ஏனைய மூவரும் குஞ்சுக்குளம் பகுதிக்கு திருப்பி சென்றிருந்த நிலையில் 5 ஆவது நபரை காணவில்லை. உடனடியாக குறித்த நபரை தேடி மண் கொண்டபட்ட இடத்திற்கு திரும்பி வந்த அவர்கள் அங்கு அதிர்ச்சி சம்பவம் ஒன்றினைக் கண்டனர்.

கொட்டப்பட்ட மண்ணில் குறித்த நபர் புதையுண்டு இருப்பதைக்கண்டு உடனடியாக அவரை மீட்ட அவர்கள் அருகிலுள்ள முருங்கன் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். எனினும் குறித்த நபர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக மருத்துவர்களாவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் மன்னார் தம்பனைக்குளம் கிராமத்தை சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தை என தெரியவந்துள்ளது.

Print Friendly, PDF & Email