SHARE

பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினரான Tom Brake ஜ அண்மையில் சந்தித்த தமிழர் குழுவொன்று, இலங்கைக்கான பிரித்தானியாவின் ஆயுத விற்பனையை நிறுத்தக்கோரும் மனுவிற்கு அவரது Liberal Democrat கட்சி சார்ந்த ஏனை பாராளுமன்ற உறுப்பினர்களையும் கையொப்பமிட ஆதரவினை பெற்றுத்தரும்படி கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனிடையே அக்குழுவில் இடம்பெற்றிருந்த விமலரட்ணம கந்தசாமி, இறுதி யுத்தத்தில் காணமாமல் போன தனது உடன்பிறவா சகோதரரான விடுதலைக் கவிஞர் புதுவை இரத்தினதுரை யை தேடித் தருமாறும் எம்.பி.யிடம் விசேட கோரிக்கை ஒன்றினையும் முன்வைத்தார்.

இலங்கைக்கான ஆயுத விற்பனையை பிரித்தானியா நிறுத்த வேண்டுமென தமிழ் தகவல் நடுத்தின் (TIC) ஏற்பாட்டில் அதன் உறுப்பினர்கள் மற்றும் பிரித்தானியா வாழ் தமிழ் இளையோர் தொடர்ச்சியாக முன்னெடுத்து வரும் போராட்டத்தின் பயனாக குறித்த விவகாரம் பிரித்தானிய பாராளுமன்றில் விவாதத்துக்கு கொண்டுவரும் நடவடிக்கையை அடைந்துள்ளது.

அந்தவகையில் இலக்கம் 1480 கொண்ட முன்பிரேரணைக்கான (Early day motion) மனுவில் இதுவரையில் அனைத்து கட்சிகளிலிருந்தும் 33 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளனர். இதில் மேற்படி எம்.பி.யின் Liberal Democrat கட்சி சார்ந்த 7 எம்.பி.க்கள் தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையிலேயே, அவரது கட்சி சார்ந்த ஏனைய நான்கு எம்.பி.க்களிடமும் குறித்த மனுவிற்கான ஆதரவினை பெற்றுத்தருமாறு மேற்படி குழுவில் இடம்பிடித்திருந்த ஏற்பாட்டாளர் நவேசுதன் நாகநாதன் மற்றும் விமலரட்ணம் கந்தசாமி, சரவணமுத்து நந்தகுமாரன், தேனுசாந் ரவீந்திரன், கணேசபிள்ளை செல்வச்சந்திரன், நவரத்தினம் விஜயதீபன், தலைமை ஒருங்கிணைப்பாளர் அஷந்தன் தியாகராஜா ஆகியோர் ஒருமித்த கோரிக்கையை விடுத்துள்ளனர்.

அதேவேளை, எதிர்வரும் பாராளுமன்ற அமர்வின்போது நடப்பாண்டில் இலங்கைக்கு பிரித்தானியா எவ்வளவு ஆயுதங்களை விற்பனை செய்துள்ளது என்ற கேள்வியையும் எழுப்புமாறு கோரியுள்ளனர்.

குறித்த EDM ற்கான அனுசரணையாளர்களில் Tom Brake எம்.பி.யும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது

இதேவேளை இக் குழுவில் இடம் பிடித்திருந்த விமலரட்ணம் கந்தசாமி, இறுதி யுத்தத்தின் போது காணாமல் ஆக்கப்பட்ட தனது உடன் பிறவா சகோதரரான விடுதலைக் கவிஞர் புதுவை இரத்தினதுரையை தேடித்தரும்படியும் எம்.பி.யிடம் உருக்கமாக கோரியிருந்தார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்து இலங்கை அரசாங்கத்தின் இழுத்தடிப்பு தொடர்பில் பிரித்தானியா அதிக கவனம் செலுத்த அரசுக்கு அழுத்தம் கொடுக்குமாறும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

சர்வதேச உண்மைகள் மற்றும் நீதித் திட்டத்திற்கான அமைப்பு (ITJP) அண்மையில் வெளியிட்டிருந்த இலங்கையில் நடைபெற்ற இறுதிப் போரின் இறுதி மூன்று நாட்களான மே 17 முதல் 19 வரையிலான காலப்பகுதியில் படையினரிடம் சரணடைந்தோரில் 500 க்கு மேற்பட்டவர்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர் என்ற அதிர்ச்சிப்பட்டியலில் கவிஞர் புதுவை இரத்தினதுரையின் பெயரும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Print Friendly, PDF & Email