SHARE

தங்கல்லையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பிலான விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு நல்குவதற்காக, பொலிஸ்மா அதிபரின் கட்டளையின் பிரகாரம், கொழும்பு குற்றப் பிரிவைச் சேர்ந்த (சி.சி.டீ) உதவி பொலிஸ் அதிகாரிகளின் தலைமை​யிலான விசேட குழுவொன்று தங்காலைக்கு விரைந்துள்ளது என பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்காலை, குடாவெல்ல மீன்பிடி துறைமுகத்தில் இன்று அதிகாலை நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரே  துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டு – தப்பிச்சென்றுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.

ரி – 56 ரக துப்பாக்கியும், கைத்துப்பாக்கியும் பயன்படுத்திலே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்தவர்கள் தங்காலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

நத்தார் பண்டிகையன்று இவ்வாறானதொரு சம்பவம் இடம்பெற்றுள்ளமை தங்காலைப் பகுதியை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர். விசேட குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.

Print Friendly, PDF & Email