SHARE

யாழ்.மாநகர சபை எல்லைக்குள் டெங்கு பரிசோதிக்கப்பட்ட 947 இடங்களில் 672 இடங்கள் டெங்கு பெருகுவதற்கு ஏதுவான சூழலாக இனம் காணப்பட்டு உள்ளன.

யாழ்.மாநகர சபை எல்லைக்குள் டெங்கு நோய் தாக்கம் அதிகரித்த நிலையில் நேற்றைய தினம் வியாழக்கிழமை சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

யாழ்.பிரேதச செயலகம், டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு , சுகாதார திணைக்களம், பொலிஸார் , பிராந்திய சுகாதர வைத்திய அதிகாரிகள் , ஊழியர்கள் உள்ளிட்டோர் இந்த சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

அதன் போது 947 இடங்களில் சோதனையிட்டதில், 672 இடங்களில் டெங்கு பரவுவதற்கு ஏதுவான சூழல்கள் காணப்பட்டுள்ளன. அதனை அடுத்து அத்தகைய இடங்களை உனடியாக துப்பரவு செய்ய அறிவுறுத்தப்பட்டது.

அத்துடன் 25 இடங்களில் நுளம்பு குடம்பிகள் காணப்பட்டன. அதனையடுத்து 17 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அதேவேளை குறித்த விசேட சோதனை நடவடிக்கைகள் எதிர்வரும் நாட்களிலும் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Print Friendly, PDF & Email