SHARE

தமிழீழ விடுதலைப்புலிகளின் சீருடையை ஒத்த நிறத்தில் ஆகாயம், கடல் மற்றும் தரைகளில் தாக்குதல் நடத்த கூடியவாறான டாங்கியின் அமைப்பில் வடிவமைக்கப்பட்ட பட்டம் ஒன்று வல்லை மண்ணில் பறக்கவிடப்பட்டது.

அந்த பட்டம் வானிலே பறந்த போது கூடி இருந்த பலரும் கரகோஷம் எழுப்பி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். 
தைப்பொங்கல் தினத்தினை முன்னிட்டு வல்வெட்டித்துறை உதயசூரியன் கடற்கரையில் பட்ட போட்டி நடத்தப்பட்டது. 

அதன் போது வித விதமான முறைகளில் வடிவமைக்கப்பட்ட பட்டங்கள் ஏற்றப்பட்டன. அதில் ” செய் அல்லது செத்துமடி ” எனும் வாசகத்துடன் அங்கயற்கண்ணி (பெண் கடற்கரும்புலி) என பெயர் பொறிக்கப்பட்ட படகு , சிவப்பு மஞ்சள் கொடி கட்டப்பட்ட யுத்த டாங்கி , இராட்ச எறும்பு , தையல் இயந்திரத்தில் தைக்கும் பெண் , சமயலறை , விளையாட்டு மைதானம் போன்ற வடிவமைப்பில் வடிவமைக்கப்பட்ட பட்டங்கள் வானில் ஏற்றப்பட்டன .

படங்கள்- மயூரப்பிரியன்

Print Friendly, PDF & Email