SHARE

பிரித்தானிய நீதித்துறைக்கே அவமானம்!

அரசியல் அழுத்தம் காரணமாக பிரியங்கா பெர்ணான்டோவுக்கு எதிரான பிடியாணையை பிரித்தானிய நிதிமன்றம் இரத்து செய்துள்ளது.

லண்டன் வாழ் புலம் பெயர் தமிழர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த இலங்கை உயர்ஸ்தானிகத்தின் முன்னாள் பாதுகாப்பு விவகார அதிகாரி பிரியங்கா பெர்னாண்டோவுக்கு எதிராக கடந்த 21 ஆம் திகதி வெஸ்மினிடஸ்டர் நீதவான் நீதிமன்றில் மூவர் கொண்ட உயர் மட்ட நீதிபதிகள் குழுவினால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணையே தற்போது இரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த திடீர் இரத்து பிரித்தானியாவின் நீதித்துறை மற்றும் அதன் சுயாதீனத்தின் மீது கேள்வி எழுப்பியுள்ளதுடன் உலகெங்கும் வாழும் தமிழர்கள் மத்தில் பெரும் அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இது அகுறித்து மேலும் தெரியவருவதாவது,

லண்டன் வாழ் புலம் பெயர் தமிழர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த பிரியங்க பெர்ணான்டோவுக்கு எதிராக ICPPG யினால் வெஸ்மினிஸ்டர் நீதவான் நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கில், பிரியங்கா பெர்ணான்டோ மீதான இரு குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டதுடன் அவருக்கு எதிரான பிடியாணையும் மூவர் அடங்கிய உயர்மட்ட நீதிபதிகள் குழுவினால் பிறப்பிக்கப்பட்டது.

எனினும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த இலங்கை அரசு, வெஸ்மினிஸ்டர் நீதவான் நீதிமன்றம் பிறப்பித்துள்ள பிடியாணை வியன்னா உடன்படிக்கையை மீறும் செயல் என தெரிவித்ததுடன் குறித்த வழக்கு குற்றஞ்சாட்டப்பட்டவரான பெர்ணான்டோ தரப்பினரிற்கு தெரியப்படுத்தாது ஒருதலைப்பட்சமாக நடைபெற்றது எனவும் குற்றம் சாட்டினர்.

அத்தோடு இது தொடர்பில் பிரித்தரினிய வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அலுவலகத்திடமும் இலங்கை அரசு முறையிட்டது.

எனினும் குறித்த வழக்கிற்கான நீதிமன்றின் அழைப்பணை பிரியங்கா பெர்ணான்டோ தரப்பினர் மற்றும் இலங்கையின் வெளிவிவகார அமைச்சு போன்றவற்றிற்கு அனுப்பி வைக்கப்பட்டதுடன் அழைப்பாணை அனுப்பப்பட்டதற்கான சான்றுகழும் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. அந்தவகையில் குறித்த வழக்கானது அறியப்படுத்தப்படாது ஒருதலைப்பட்சமாக இடம்பெற்றது என பிரியங்க தரப்பினரால் அப்பட்டமாக மறுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே, முவர் அடங்கிய உயர் மட்ட நீதிபதிகள் குழுவினால் பிரியங்கா பெர்ணான்டோ மீது பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவு அரசியல் அழுத்தங்கள் காரணமா இரத்து செய்யப்பட்டுள்ளதுடன் குறித்த வழக்கு மேலும் தொடரவுள்ளது.

பிடரிகேடியர் பிரியங்கா பெர்ணான்டோ மீதான பிடியாணை இரத்து தொடர்பில் ICPPGஅமைப்பு இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு ,

Print Friendly, PDF & Email