SHARE

வடமாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபருக்கு எதிராக தேசிய பொலிஸ் ஆணைக்குழு மற்றும் வடமாகாண ஆளுநரிடம் இன்று புதன்கிழமை காலை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் கஞ்சா கடத்தல் காரர்கள் தொடர்பில் தகவல் வழங்கிய மாணவன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கத்தவறியதியுள்ளார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்தே வடமாகாண சிரேஸ்ர பிரதி பொலிஸ்மா அதிபர் றொசாந் பெர்ணான்டோவிற்கு எதிராக இம்முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வடமாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசாவினாலேயே மேற்படி முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அண்மையில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட வடமாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் கிளிநொச்சி மாணவன் தாக்கப்பட்ட சம்பவத்திற்கும், கஞ்சா கடத்தல் காரர்களுக்கும் தொடர்பில்லை என்று தெரிவித்திருந்தார்.

மாணவன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொள்ள தவறியுள்ள பொலிஸார் இவ்வாறு தாக்குதல் சம்பவத்தை மூடி மறைக்கும் செய்பாட்டினை செய்யக் கூடாது என்று தெரிவித்தும், குறித்த சம்பவம் தொடர்பில் உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தியே தவராசா மேற்படி முறைப்பாட்டினை செய்துள்ளார். 

Print Friendly, PDF & Email