SHARE

-யாழ் நீதிபதி கண்டிப்பான எச்சரிக்கை

நீதி­மன்­றுக்கு வரு­வோர் நேர்த்­தி­யாக ஆடை அணி­யா­மல், தலை முடி வெட்­டா­மல் என்­ற­வா­றெல்­லாம் ஒழுக்­கம் பேணாது வரு­வார்­க­ளே­யா­னால், விளக்­க­ம­றி­ய­லில் வைக்­கப்­ப­டு­வர் என்று யாழ்ப்­பாண நீதி­மன்ற நீதி­வான் ஏ.எஸ்.பி.போல் கண்­டிப்­பான அறி­வு­றுத்­தல் விடுத்­துள்­ளார்.

யாழ்ப்­பா­ணம் நல்­லூர், முட­மா­வ­டி யில் வீடு­களை அடித்து உடைத்­தமை, வாள்­வெட்­டில் ஈடு­பட்­டமை ஆகிய குற்­றச்­சாட்­டில் கைது செய்­யப்­பட்­ட­வர்­கள் மீதான வழக்கு யாழ்ப்­பாண நீதி­வான் மன்­றில் நேற்று விசா­ர­ணைக்கு வந்­தது.

மன்­றில் முற்­பட்ட சந்­தேக நபர்­கள் நேர்த்­தி­யாக ஆடை­கள் அணி­யாது, தலை முடி வெட்­டாது காணப்­பட்­ட­னர். அவர்­களை அவ­தா­னித்த நீதி­வான் நீதி­மன்­றுக்கு சமூ­கம் அளிக்­கும் போது ஒழுக்க விழு­மி­யங்­க­ளைக் கடைப்­பி­டிக்க வேண்­டும்.

இனி­மேல் வழக்­குக்­காக நீதி­மன்­றுக்கு­ வரும்­போது நேர்த்­தி­யாக ஆடை­கள் அணிந்து வர­வேண்­டும். நாக­ரி­க­மான முறை­யில் தலை முடி­ வெட்­டி­யி­ருத்­தல் வேண்­டும். ஒழுக்­க­மற்ற முறை­யில் வந்­தால் சந்­தேக நபர்­கள் விளக்­க­ம­றி­ய­லில் வைக்­கப்­ப­டு­வீர்­கள் என்று எச்­ச­ரித்­தார். 

Print Friendly, PDF & Email