SHARE

பிரித்தானியாவில் இன்று நடைபெற்ற இலங்கையின் சுதந்திர தின எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் இளைஞர்கள் சிலர் இலங்கையின் தேசிய கொடியை எரித்து தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இலங்கையின் சுதந்திர தினம் தமிர்களின் கரி நாள் என்பதை உலகிற்கு எடுத்துக்காட்ட 71 ஆவது சுதந்திர தினமான இன்று லண்டனிலுள்ள இலங்கைத் தூதரகத்திற்கு முன்னாள் புலம்பெயர் தமிழர்களால் பாரிய எதிர்ப்பு ஆர்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது.

கடும் குளிரையும் பொருட்படுத்தாது பெருமளவிலானோர் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழீழ தேசிக் கொடிகளை கைகளில் உயர்த்திப்பிடித்தவர்களார் இலங்கை அரசுக்கு எதிராக கோசங்களை எழுப்பினர்.

இதன் போதே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த இளையுர்கள் சிலரினால் சிறிலங்காவின் தேசிய கொடி தீயிட்டு கொழுத்தப்பட்டது. ஒரே நாட்டுக்குள் தமிழர்கள் தொடர்ந்தும் துன்புறுத்தப்பட்டு இனப்படுகொலை செய்யப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில் இலங்கை சுதந்திர தினத்தை எவ்வாறு கொண்டாட முடியும் என்று கேள்வி எழுப்பியவர்களாக இலங்கையின் தேசிய கொடியான வாள் ஏந்திய சிங்கக்கொடியியை கொழுத்தி தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

Print Friendly, PDF & Email