SHARE

யாழ்ப்பாணத்திலுள்ள துரையப்பா விளையாட்டு மைதானத்தின் பெயரினை மாற்றுவதற்கு ரெலோ எடுத்த முயற்சி சர்ச்சையாக வெடித்துள்ளது.

யாழ் மாநகர முன்னாள் முதல்வரான துரையப்பா தமிழினத் துரோகி என அடையாளப்படுத்தப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டதால் யாழ்ப்பாணம் மாநகரசபையின் கட்டுப்பாட்டிலுல் துரையப்பாவின் பெயிரில் அமைந்த துரையப்பா விளையாட்டு மைதானத்தின் பெயரை மாற்றுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதற்கான முழுமுயற்சியில் யாழ் மாநகர துணை முதல்வரான ரெலோ அமைப்பினைச் சேர்ந்த துரைராசா ஈசன்  ஈடுபட்டுவருகின்றார். இதன்பொருட்டு யாழ் மாநகரசபையின் 21 ஆம் திகதிய அமர்வில் பிரேரணை ஒன்றினை சமர்ப்பிப்பதற்கு தயாராகிவரும் அவர் இதற்கு ஆதரவு வழங்குமாறு யாழ் மாநகரசபையில் அங்கம்வகிக்கும் ஏனைய கட்சிகளின் ஒவ்வொரு உறுப்பினரையும் தனித்தனியாக சந்தித்து ஆதரவு கோரிவருவதாக தெரயவந்துள்ளது.

இந்நிலையில் இவ்வகாரம் சர்ச்சையாக வெடித்துள்ளது. ரெலோவின் இந்த முடிவிற்கு தமிழரசுக்கட்சி கடும் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளது. இதனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள்ளேயே பலத்த கருத்து மோதல்கள் இடம்பெற்றுவருகின்றது. குறித்த பெயரினை மாற்றியே தீரவேண்டும் என்பதில் ரெலோ தரப்பு உறுதியாக நிற்பதாக கூறப்படுகின்றது.

எனினும் துணை மேயரினால் சமர்ப்பிக்கப்படவுள்ள குறித்த பிரேரணையை சபைக்கே எடுத்துக்கொள்ளாமல் தவிர்த்துவிடுமாறு யாழ் மாநகர முதல்வர் ஆர்னோல்ட்டிற்கு தமிழரசுக் கட்சியின் தலைமைப்பீடம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக தெரியவருகின்றது.

Print Friendly, PDF & Email