SHARE

Sky செய்தி சேவை அதிரடி தகவல்

யுத்தம் முடிவடைந்து 10 ஆண்டுகளை எட்டியுள்ள போதிலும் தற்போதும் இலங்கையில் தமிழ் மக்கள் மீதான தொடர் சித்திரவதைகள் ஆட்கடத்தல்கள் இடம் பெறுகின்றன என்பதை நிரூபிக்கும் வகையில் ஆங்கில செய்தி ஊடகமான Sky செய்தி சேவை அண்மையில் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது.

யுத்தம் முடிவடைந்து 10 ஆண்டுகளை எட்டியுள்ள போதிலும் தற்போதும் இலங்கையில் தமிழ் மக்கள் மீதான தொடர் சித்திரவதைகள் ஆட்கடத்தல்கள் இடம் பெறுகின்றன என்பதை நிரூபிக்கும் வகையில் ஆங்கில செய்தி ஊடகமான Sky செய்தி சேவை அண்மையில் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது.

பிரித்தானியாவில் அகதி தஞ்சம் கோரியவர்களில் சிலருடனான நேர்காணலின் அடிப்படையிலேயே இந்த தகவலை குறித்த ஊடகம் வெளிப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இதற்கான நேர்காணலை வழங்கியவர்களில் ஒருவரான கிருஷ்ணமூர்த்தி உமாராஜ் கருத்து தெரிவிக்கையில்,

இலங்கையில் கடுமையான சித்திரவதையை அனுபவித்த நான் அவற்றிலிருந்து தப்பி உயிரை காக்க போலி கடவுச் சீட்டுடன் நாட்டை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டேன்.

மேலும் துரதிஷ்டவசமாக அகதி தஞ்சக் கோரிக்கை பிரித்தானியாவால் நிராகரிக்கப்பட்டதால் தற்போது அன்றாட வாழ்க்கை செலவை சமாளிக்க முடியாமல் போராடி வருகிறேன். வேலை செய்ய அனுமதி இல்லாத காரணத்தால் உணவுத்தேவையை பூர்த்தி செய்ய நண்பர்களுடன் கார்களை பழுதுபார்த்து அதற்கு பிரதியுபகாரமாக ஒரு சிலர் தரும் சிறு தொகை பணத்திலேயே வாழக்கையை நகர்த்தி வருகிறேன்.

இலங்கையில் நல்லாட்சி என்று சொல்லி புதிய ஆட்சி நிலவி வருகின்ற போதிலும் தற்போதும் அதிகாரிகள் என்னைத் தேடி எனது குடும்பத்தை தொடர்ந்து அச்சுறுத்தி வருகின்றனர்.இதனால்திரும்பி சென்றால் எனது உயிருக்கு ஆபத்து என்ற ஒரே காரணத்தினாலேயே இந்த கடினமான நிலை அனுபவித்து வருகிறேன் என்றார்.

மேற்குறிப்பிட்ட விடயங்களை குறித்த ஆங்கில ஊடகத்திற்கு மேற்படி இளைஞர் தெரிவித்துள்ள போதிலும் அதில் ஒரு பகுதி மாத்திரமே அதில் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Print Friendly, PDF & Email