SHARE

கொலை அச்சுறுத்தல் விடுத்த பிரியங்கா பெர்னாண்டோ தொடர்பிலான புலம்பெயர் தமிழ் இளைஞர் ஒருவரின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்டீபன் மோர்கன் பிரியங்கா பெர்னாண்டோ இலங்கைக்கு தப்பி சென்றது எவ்வாறு என பிரித்தானிய நாடாளுமன்றில் கேள்வி எழுப்பியுள்ளார்.

கந்தலிங்கம் வினோதன்

செயற்பாட்டாளரான கந்தலிங்கம் வினோதன் என்ற இளைஞன் அவருக்கு அனுப்பிவைத்த ஈமெயில் ஊடான கோரிகையினையடுத்தே கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற நாடாளுமன்ற அமர்பில் எம்.பி. மேற்கண்டவாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

லண்டன் வாழ் புலம்பெயர் தமிழர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த பிரியங்கா பெர்னாண்டோவுக்கு எதிராக வெஸ்மினிஸ்டர் நீதவான் நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணை பின்னர் அரசியல் அழுத்தங்கள் காரணமாக நீதிமன்றினால் இரத்து செய்யப்பட்டது.

இதனையடுத்து இது குறித்து அதிர்ப்தியடைந்த செயற்பாட்டாளரான கந்தலிங்கம் வினோதன் தான் வசிக்கும் தொகுதியை (போஸ்ட் மவுத்) பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்டீபன் மோர்கனுக்கு மின்னஞ்சல் ஒன்றினை அனுப்பி வைத்திருந்தார்.

அதில் யுத்தக்குற்றவாளியான பிரியங்கா பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்கில் அரசியல் தலையீட்டை நிறுத்த வேண்டும் என்றும் குற்றவாளி பாதுகாப்பா பிரித்தானியாவை விட்டு வெளியேறியதற்கு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் (FCO) பங்கு என்னவாக அமைந்தது மற்றும் அவரது பிடியாணை எவ்வாறு இரத்து செய்யப்பட்டது என FCO க்கு எழுதும் படியும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே கந்தலிங்கம் வினோதனின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட எம்.பி. நாடாளுமன்றில் வெளியுறவு மற்றும் பொதுநலவாய விவகாரங்களுக்கான செயலாளரிடம் மேற்படி கேள்விகளை எழுப்பியுள்ளார்.

அதேவேளை, பாராளுமன்றில் தன்னால் எழுப்பப்பட்டிருந்த கேள்விகள் குறித்தும் அதற்கான பதில்கள் தொடர்பிலும் வினோதனுக்கு பதில் மின்னஞ்சல் ஒன்றினையும் அவர் அனுப்பிவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Print Friendly, PDF & Email