SHARE

பிரித்தானியாவைச் சேர்ந்த புலம்பெயர் தமிழ் செயற்பாட்டாளர்கள் இருவர் லண்டன் கீத்துரோ விமான நிலையத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

வாசீகன் தங்கவேல் மற்றும் அவரது நண்பர் தனேஸ் ஆகிய இரு செயற்பாட்டாளர்களுமே ஜெனிவா செல்லவிருந்த விமானத்தில் வைத்து காலை 6.20 மணியளவில் பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஐ.நா. கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் நேற்று திங்கட் கிழமை ஜெனிவாவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்து கொள்ள புறப்பட்டிருந்த வேளையிலேயே ‘நீங்கள் பயங்கரவாதத்தை முயற்சிக்கிறீர்கள் உங்கள் உடமையில் ஒரு கொடி இருக்கிறது என கத்திய வாறு அதிகாரிகள் அவர்கள் இருவரையும் கைது செய்துள்ளனர்.

ஆர்பாட்டப் பேரணியில் கலந்து கொள்ளவதற்காக புறப்பட்ட அவர்கள் பயணப் பையில் தமிழீழ தேசியக் கொடியினை வைத்திருந்தமையினாலேயே பொலிஸார் குழப்பமடைந்து பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கையை மேற்கொண்டதுடன் அவர்களது கடவுச்சீட்டு மற்றும் உடமைகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.

அதேவேளை அன்றைய தினமே மாலை 5 மணியளவில் இருவது வீடுகளிற்கும் சென்று சோதனைகளை மேற்கொண்ட பொலிஸார் அங்கிருந்து மடி கணணி மன்றும் பல ஆவணங்கiளும் எடுத்துச்சென்றுள்ளனர்.

பின்னர் நீண்ட நேர விசாரணைகளின் பின்னர் இருவரும் இரவு 11 மணியளவில் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.

பிரித்தானியாவிலுள்ள புலம்பெயர் செயற்பாட்டாளர்கள் இலங்கைத் தூதரகத்தினால் உளவு பார்க்கப்படுகிறார்கள் என்ற தகவல் அண்மையில் வெஸ்மினிஸ்டர் நீதவான் நீதிமன்றில் நடைபெற்ற வழக்கில் வெளிவந்திருந்த நிலையில் இந்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Print Friendly, PDF & Email