SHARE

ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் மக்கள் சார்பில் முன்வைக்க வேண்டிய கோரிக்கைகள் ஏதாவது இருப்பின் அவர்கள் அதனை எழுத்து மூலமாக சமர்ப்பிக்கலாம் வட மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார். 

அது தொடர்பில் வெளியிடப்பட்டு உள்ள ஊடக அறிக்கையில் , 

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத்தொடர் பெப்ரவரி மாதம் 25 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் கலந்து கொள்வதற்காக வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் அவர்களை ஜனாதிபதி கௌரவ மைத்திரிபால சிறிசேனஅவர்கள் நியமித்துள்ளார்.

ஜெனீவாவில் இடம்பெறும் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் முன்வைக்க வேண்டுமென கருதும் தமது கோரிக்கைகளை பொதுமக்கள் அல்லது பொது அமைப்புகள், எதிர்வரும் புதன்கிழமை (13)ஆம் திகதி யாழ்ப்பாணம் கைதடியில் அமைந்துள்ள வட மாகாண முதலமைச்சர் அமைச்சு அலுவலகத்தில் இடம்பெறவுள்ள ஆளுநரின் பொதுமக்கள் சந்திப்பின்போது எழுத்து மூலமாக நேரடியாக கையளிக்கமுடியும்.

பொதுமக்களின் நலன் கருதி குறித்த கோரிக்கைகளை சமர்ப்பிப்பதற்கென தனியான பிரிவு அன்று அமைக்கப்படவுள்ளது. என அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. 

Print Friendly, PDF & Email