SHARE

கொலை அச்சுறுத்தல் விடுத்த பிரியங்கா பெர்னாண்டோக்கு எதிரான தீர்ப்பை இடைநிறுத்தியுள்ள வெஸ்மினிஸ்டர் நீதவான் நீதிமன்றம் எதிர் வரும் மே மாதத்திற்கு வழக்கினை ஒத்திவைத்துள்ளது.

பிரியங்கா தரப்பிலிருந்து ஆஜரான சட்டத்தரணி, வழக்கு விசாரணைக்கு முன்னதாக அனுப்பிவைக்கப்பட்ட ஆவணங்களை நீதிமன்ற அதிகாரிகள் கவனத்தில்எடுத்துக்கொள்ளவில்லை என மன்றில் எடுத்துரைத்த நிலையிலேயே நீதி மன்றின் மீதான இக் குற்றச்சாட்டுகளுக்கு இடமளிக்காது மீண்டும் ஒரு சர்ந்தர்ப்பதை அவர்களுக்கு வழங்க தீர்ப்பினை ஒத்திவைத்த நீதிபதி அடுத்தகட்ட வழக்கு மே மாதம் 7 ஆம் திகதி நடைபெறும் என அறிவித்தார்.

இந்நிலையில் குறித்த வழக்கு மீண்டும் முழுமையாக நடைபெறவுள்ளதுடன் சாட்சியங்களும் மீளப்பதிவு செய்யப்படவுள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு சுதந்திர தின எதிரப்பு ஆர்ப்பாட்டத்தின் போது புலம்;பெயர் தமிழர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த இலங்கை தூதரகத்தின் பாதுகாப்பு அதிகாரி பிரியங்கா பெர்னாண்டோவுக்கு எதிராக ICPPG யினால் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை இந்த ஆண்டு பெப்ரவரியில் விசாரணைக்குஎடுத்திருந்த வெஸ்ட்மினிஸ்டர் நீதிவான் நீதிமன்றம் பிரிகேடியர் பிரியங்கபெர்னாண்டோவை குற்றவாளியாக அடையாளப்படுத்தியதுடன்இ அவரைகைதுசெய்யுமாறும் பிடியாணை பிறப்பித்தது.

எனினும் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவிற்குஇராஜதந்திர தண்டனை முக்தி இருப்பதாக சிறிலங்கா வெறிவிவகார அமைச்சுஇ பிரித்தானியவெளிவிவகார அமைச்சின் ஊடாக தெரியப்படுத்திய நிலையில் அவர் மீதான பிடியாணையை வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றம் மீளப் பெற்றுக்கொண்டது.

எவ்வாறாயினும் மார்ச் முதலாம் திகதி இடம்பெற்ற வழக்கவிசாரணையின் போது சிறிலங்கா உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் பாதுகாப்பு அதிகாரியாககடமையாற்றிய பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவின் கழுத்தை அறுக்கும் சைகையைகாண்பித்து அச்சுறுத்திய நடவடிக்கை அவரது இராஜதந்திர கடமையுடன் தொடர்பில்லை என்றுநீதிமன்றம் அறிவித்தது.

இந்நிலையில் இன்று மீண்டும் குறித்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது பிரியங்கா தரப்பிலிருந்து ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றின் தவறுகள் மீது குற்றச்சாட்டினை முன்வைத்தார். ஆதில் பிரியங்கா பெர்னாண்டோ வழக்கு தொடர்ப்பில் நிதீ மன்றிற்கு அனுப்பி வைக்கப்பட்ட ஆவணங்களை அதிகாரிகள் கவனத்தில் கொள்ளவில்லை எனவும் தாங்கள் கோரிய 60 நாள் அவகாசம் தொடர்பிலும் கவனம் செலுத்தவில்லை. இவற்றனை கவனத்தில் கொள்ளாமலே நீதிமன்றின் விசாரணைகள் நடைபெற்றது என எடுத்துரைத்தார்.

இதனிடையே இன்றைய வழக்கு விசாரணையின் போது நீதிமன்றின் முன்றலில் ஒன்றுதிரண்ட பெருமளவிலான தமிழர்கள் குற்றவாளியான பிரியங்கா பெர்னாண்டோவை கைது செய்யுமாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Print Friendly, PDF & Email