SHARE

ஜக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையிலே சமர்ப்பிப்பதற்கு எங்களால் வழங்கப்பட்ட, முன்னாள் வடமாகாண சபையில் நிறைவேற்றிய 02 தீர்மானங்களை நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதை பகிரங்கமாக வெளிப்படுத்த வேண்டுமென
முன்னாள் வடமாகாண சபை உறுப்பினரான எம்.கே.சிவாஜிலிங்கம் வடக்கு ஆளுநரிடம் பகிரங்கமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

இதனை ஊடகங்கள் வாயிலாகவேனும் தெரியப்படுத்துமாறும் கேட்டுள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே சிவாஜிலிங்கம் இவ்வாறு தெரிவித்தார்.

ஆளுநரின் வேண்டுகோளின் படி ஆளுநரின் செயலாளரினால் வடமாகாணத்தினுடைய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் வடக்கு மாகாண சபையினுடைய முன்னாள் உறுப்பினர்களுக்கும் ஒரு வேண்டுகோள் பதிவு தபால் மூலம் விடுக்கப்பட்டிருந்தது.

உங்களின் வேண்டுகோளின் அடிப்படையிலே நாங்கள் வழங்கிய இரண்டு தீர்மானங்களை நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதை தயவு செய்து ஊடகங்கள் வாயிலாக அறியத் தாருங்கள். ஜக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையிலே சமர்ப்பிக்கவில்லை உங்கள் கையில் இருக்கின்றன என்றால் அதனை தெரியப்படுத்துங்கள். குப்பைத் தொட்டியில் தான் போட்டீர்கள் என்றால் அதையும் சொல்லுங்கள். அல்லது என்ன செய்துள்ளீர்கள் என்பதை சொல்லுங்கள் என்பதை ஊடகங்கள் வாயிலாக நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.

ஜக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையிலே சமர்ப்பிப்பதற்கு உங்களது யோசனைகள் இருந்தால் அதை ஒப்படையுங்கள் என்று நீங்கள் கூறிய அடிப்படையிலேயே நாங்கள் 3 பேர் அதனை கையளித்திருந்தோம் என அவர் தெரிவித்திருந்தார்.

Print Friendly, PDF & Email