SHARE

ப.சுகிர்தன்

புலம்பெயர் தமிழர்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் 3 ஆவது பொதுத்தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ளது.

பிரித்தானியா கனடா பிரான்ஸ் ஜேர்மனி சுவிஸ் அமெரிக்கா அவுஸ்திரேலியா டென்மார்க் நோர்வே இத்தாலி தென் ஆபிரிக்கா நியூஸிலாந்து சுவீடன் பின்லாந்து மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகளில் வாழும் புலம் பெயர் தமிழர்களிடையே இப் பொதுத்தேர்தல் இடம்பெறவுள்ளது.

இந்நிலையில் பிரித்தானியாவுக்கான நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 27 ஆம் திகதி நடைபெறும் என பிரித்தானியானிவுக்குரிய தேர்தல் குழு அறிவித்துள்ளது.

இளம் தலைமுறையினர் அதிகம் களமிறங்கியுள்ள பிரித்தானியாவுக்கான இம்முறை தேர்தலில் 20 அரசவை உறுப்பினர்கள் தெரிவுக்காக 32 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். லண்டனிலிருந்து 18 உறுப்பினரும் ஸ்கொட்லாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய இடங்களிலிருந்து தலா ஒருவருமாக மொத்தம் 20 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

பெண்கள் இளையோர் ஏனையோர் என மூன்று பிரிவுகளின் அடிப்படையில் இத்தெரிவுகள் இடம்பெறவுள்ளது.

அந்தவகையில் பிரித்தானியாவில் இளையோர் பிரிவில் 101- கிருஷாந்த் துரைசிங்கம், 102-குகறூபன் கணேசலிங்கம், 103-சந்துரு குருலிங்கம், 104-கிஷ்ணமூர்த்தி கஜவதன், 105- கந்தையா அஜந்தன், 106 – சந்திரகுமார் பிரேம்குமார், 107- ராஜதுரை பார்த்திபன், 108- ராசேந்திரம் நுஜிதன் ஆகியோரும் பெண்கள் பிரிவில் 201- பிரியந்திய சுதர்சன், 202- குமுதினி மார்க்கண்டு, 204- கார்த்திகா சுரேந்திரன், 203- பாலாம்பிகை முருகதாஸ் ஆகியோரும்

ஏனையோர் பிரிவில் 301- ஞானசேகரம் கலைராசன், 302- சொக்கலிங்கம் யோகலிங்கம், 303 – வேலுப்பிள்ளை மகாலிங்கம் மயூரதன், 304- விசாகன் நடராஜா, 305- சுந்தரலிங்கம் கணேசலிங்கம், 306- சுரேந்திரன் வடிவேல், 307- விநாசித்தம்பி லிங்கஜோதி, 308- குலசிங்கம் சந்திரமோகன், 309- திருக்குமரன் இராசலிங்கம், 310- பத்மநாதன் மயில்வாகனம், 311- ஜெயராஜ் ஜெகநாதன், 312- ராமு சோதித்தாஸ், 313- அம்பலவாணர் அகிலேஸ்வரன், 314- தாமோதரம்பிள்ளை முருகதாஸ், 315- சிதம்பரம் சசிதரன், 316- தேவராஜா நீதிராஜா, 317- கந்தப்பு ஆறுமுகம், 318- வன்னியசிங்கம் குணசீலன், 319- பத்மநாபன் மணிவண்ணன், 320- அருணாச்சலம் ராஜலிங்கம் ஆகியோரும் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில், வாக்குகளை செலுத்த தேர்தல் நடைபெறும் நாடுகளில் வாழும் புலம்பெயர்தமிழர்கள் தமது வாக்கு உரிமைக்கான பதிவுகளை செய்யவேண்டும். அதனடிப்படையில் பிரித்தானியாவில் நடைபெறும் தேர்தலில் தபால் மூலம் வாக்களிக்க விரும்புவோம் https://tgteelection.org/registering-to-vote/ என்ற இணையத்தினூடு பதிவுகளை செய்து தமக்காக வாக்குச்சீட்டுகளை பெற்றுக்கொள்ளமுடியும்.

குறித்த தபால் மூல வாக்கு சீட்டுகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் ஏப்ரல் 07 ஆம் திகதிவரை தேர்த்தல் குழுவினரால் முகவரிகளுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதுடன் வாக்களிப்போர் அதனை திருப்பி அனுப்புவதற்குரிய இறுதி நாள் ஏப்ரல் 19 ஆம் திகதி என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை நேரடி வாக்களிப்பு செய்ய விரும்புவோர் தேர்தல் நாளான 27 ஆம் திகதி வாக்குச் சாவடிகளுக்கு சென்று நேரடியாகவே தமது வாக்குகளை செலுத்தமுடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழர்கள் மீது திட்டமிட்டு நடத்தப்பட்ட இனப்படுகொலை நிகழ்ந்தேறிய முதலாவது வருடத்தில் ஈழத்தமிழர்களின் அபிலாசைகளை சர்வதேசத்திற்கு எடுத்துரைக்க நீதிக்கான குரலாக அரசியல் ரீதியில் புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள தமிழர்களை மையமாக கொண்டு கருதுகோள் ரீதியானதொரு அரசாங்கமாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் 2010ம் ஆண்டு உருவாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Print Friendly, PDF & Email