SHARE

நாட்டில் ஏற்பட்டுள்ள வரட்சியின் தாக்கத்தால் யாழ்.மாவட்டத்தில் மட்டும் 7 ஆயிரத்து 311 குடும்பங்களைச் சேர்ந்த 25 ஆயிரத்து 191 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிவித்துள்ளது. 

வரட்சியால் யாழ்.மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களில் வசிப்பவர்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர் என்றும், ஏனைய பகுதிகளில் உள்ளவர்களுக்கு பாதிப்புக்கள் ஏற்படவில்லை என்றும் அனர்த்த முகாமைப் பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி நெடுந்தீவு பிரதேச செயலர் பிரிவின் ஆயிரத்து 31 குடும்பங்களைச் சேர்ந்த 3 ஆயிருத்து 71 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதே போன்று வேலணை பிரதேச செயலர் பிரிவில் 2 ஆயிருத்த 798 குடும்பங்களைச் சேர்ந்த 9 ஆயிரத்து 642 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஊர்காவற்றுறை பிரதேச செயலர் பிரிவில் 2 ஆயிருத்த 422 கடும்பங்களைச் சேர்ந்த 7 ஆயிரத்து 848 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச செயரர் பிரிவில் ஆயிரத்து 60 குடும்பங்களைச் சேர்ந்த 4 ஆயிரத்து 630 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களின் தகவல்கள் திரட்டப்பட்டு, அவர்களுக்கான உதவித்திட்டங்கள் வழங்குவதற்கான நடவடிக்கை யாழ்.மாவட்டச் செயலகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. குறிப்பாக வரட்சியால் பாதிக்கப்பட்ட பிதேச செயரர் பிரிவுகளில் நீர் விநியோகம் நேற்று திங்கட்கிழமை முதல் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது

Print Friendly, PDF & Email