SHARE

அமெரிக்காவில் தனக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளை செல்லுபடியற்றவையாக்குவதற்கான நடவடிக்கைகளில் தனது வழக்கறிஞர்கள் ஈடுபட்டுள்ளனர் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இலங்கை திரும்பிய பின்னர் ஊடகவியலாளர்களிற்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

எனக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அறிந்துள்ளேன் என தெரிவித்துள்ள கோத்தபாய ராஜபக்ச எனினும் எனக்கு உரிய முறையில் அழைப்பாணை அனுப்பப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

பிரஜாவுரிமையை கைவிடுவதற்காகவே நான் அமெரிக்கா சென்றேன்  அதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்கும் நடவடிக்கைகளை வெற்றிகரமாக பூர்த்திசெய்துள்ளேன்,தற்போது அமெரிக்காவின் பதிலிற்காக காத்திருக்கின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.

எனக்கு எதிராக வழக்குதாக்கல்செய்யப்பட்டமைக்கு அரசியல் நோக்கங்களே காரணம் எனவும் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

Print Friendly, PDF & Email