SHARE

விநியோக தடை ஏற்படக் கூடும் என மின் பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் மின்னுற்பத்தி நிலையங்களுக்கு அருகில் உள்ள நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 30 சதவீதம் குறைவடைந்துள்ளது. 2017 ஆம் ஆண்டின் பின்னர் ஏற்பட்ட குறைந்த நீர் மட்டம் இதுவென தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்சார உற்பத்தி நிலையங்களுக்கு அருகில் கடந்த சில நாட்களாக மழை பெய்த போதும், நீர்மட்டம் உயரம் அளவிற்கு போதுமானதாக இல்லை என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. அந்த அமைச்சின் ஊடக பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்த்தன இதனை தெரிவித்துள்ளார்.

தற்போதைய சூழ்நிலையில், 90 சதவீத மின்சார உற்பத்தியை அனல் மின்நிலையங்கள் ஊடாகவே பெற நேரிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பண்டிகை காலத்தின் போது நாள் ஒன்றுக்கான மின்சார பயன்பாடு குறைவடைந்துள்ளதாகவும் பண்டிகை காலத்தின் பின்னர் மின்சாரத்திற்கான தேவை அதிகரிக்க கூடும் என்றும் மின்சக்தி அமைச்சின் ஊடக பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்த்தன சுட்டிக்காட்டியுள்ளார்.

Print Friendly, PDF & Email