SHARE

இலங்கையில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்று ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் தலைவர் அபூபக்கர் அல் பக்டாடி காணொளியை வெளியிட்டுள்ளார்.

கடந்த 5 வருடங்களின் பின்னர் முதல் முதலாக காணொளியில் தோற்றிய ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல் பக்காதி , இலங்கையில் அண்மைக்காலமாக இடம்பெற்ற தாக்குதல்களைக் குறிப்பிட்டுள்ளார்.

சிரியாவில் IS ன் இறுதி கோட்டையாக இருந்த பாகுஸ் என்ற இடத்தில் ஏற்பட்ட இழப்புக்கு பழிவாங்களாக இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் இந்த காணொளியில் தெரிவித்துள்ளார்.

மேலும் அதில் எதிராளிகளை அழிப்பது குறித்து சிலருடன் கலந்துரையாடும் அபூபக்கர் அல் பக்டாடி, எதிரிகளை அழிக்கும் நடவடிக்கை தொடரும் எனவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் தினத்தன்று கொழும்பு, மட்டக்களப்பு, நீர்கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் இதுவரையில் 253 பேர் உயிரிழந்துள்ளதுடன், 500 இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில் இந்த தாக்குதலுக்கும் சாய்ந்தமருது தற்கொலை குண்டு தாக்குதலுக்கும் ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றுக்கொண்ட நிலையில் மீண்டும் உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்று கொண்டுள்ளது.

Print Friendly, PDF & Email