SHARE

கடந்த சில காலங்களாக தமிழீழ தேசியதலைவரினுடைய படத்தினை அழிக்கும் அல்லது பகிர்வபர்களுடைய கணக்குகளை முடக்கும் செயலினை முகநூல் நிர்வாகம் செயற்படுத்தி செயல்படுத்திவரும் நிலையில், முகநூலில் தமிழ் மக்கள் #prabhakaran_is_our_community_standard 
என்கின்ற ‘#’ காஸ்ரக் (hagstag) ஒன்றை நடுமுறைப்படுத்த ஆரம்பித்துள்ளனர்.

அந்தவகையில் முகநூல் (facebook) மற்றும் ருவிற்றரில் (twitter) இந்த காஸ்ரக்கில் தமிழீழ தேசிய தலைவரின் படம் அலங்கரித்து வருகிறது.

தமது Community Standard க்கு எமது தேசிய தலைவரின் புகைப்படம் பொருத்தமானது அல்ல என்கின்ற கோட்பாட்டின் அடிப்படையிலேயே முகநூல் நிர்வாகம் தமிழீழ தேசிய தலைவருடைய படத்தை அழித்து வருகிறது.

இந்நிலையில் உலகத்தமிழர்கள் தமிழீழ தேசிய தலைவரே எமது Community Standard என ரென்ட் செய்து முகநூலை திக்குமுக்காட செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

#prabhakaran_is_our_community_standard

Print Friendly, PDF & Email