SHARE

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 10 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ITJP நடாத்தும் சட்ட நிபுணர்களுடனான விசேட கருத்தரங்கு

தமிழ் இனத்திற்கு எதிராக நிகழ்த்தப்பட்ட முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 10 ஆவது ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு சர்வதேச உண்மைகள் மற்றும் நீதித்திட்டத்திற்கான அமைப்பு (ITJP) நடாத்தும் விசேட கலந்துரையாடல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (10) பிரித்தானியாவில் நடைபெறவுள்ளது.

இலங்கையில் இனப்படுகொலை நடைபெற்று 10 வருடங்களாகியும் நீதி கிடைக்காத நிலையில் சர்வதேச நீதிமன்றங்கள் நீதி வழங்கத்தவறும் பட்சத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க சட்டரீதியாக மாற்று வழிகள் உள்ளனவா என்பது பற்றி சர்வதேச சட்ட நிபுணர்களின் ஆலோசனைகளை பகிர்வதற்காகா இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இலங்கை தண்டணையிலிருந்து தப்பித்தலுக்கு எதிரான போராட்டத்தின் சட்ட நுட்பங்கள் எனும் தொனிப்பொருளில் SOAS லண்டன் பல்கலைக்கழகத்தின் Khalili Lecture அரங்கில் (10 Thornhaugh Street, Russell Square, London, WC1H 0XG ) மாலை 18.00 முதல் 20.00 மணி வரை இக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

இதில் ITJP யின் பணிப்பாளரும் மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான யஸ்மின் சூக்கா (Yasmin Sooka), சித்திரவதையை முடிவுக்கு கொண்டு வருதல் மற்றும் உயிர் தப்பியவர்களுகாகன நீதித்தேவை அமைப்பின் ( Redress) பணிப்பாளர் றூபேட் ஸ்கில்பெக் (Rupert Skilbeck) மற்றும் ளுழுயுளு பல்கலைக்கழக்கத்தின் சர்வதேச அரசியலின் பிரிவின் மூத்த விரிவுரையாளர் மார்க் லெவ்பி (Mark Laffey) ஆகியோர் விசேட உரைகளை நிகழ்த்தவுள்ளனர்.

இந்த நிகழ்வு SOAS பல்கலைக்கழகத்தின் Centre on Conflict, Rights and justice (CCRJ) அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் யுத்தத்தின் இறுதி மாதங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் தப்பி வந்தவர்களின் வாக்குமூலங்கள் அடிப்படையிலான ஒளிப்பட கண்காட்சியும் ITJP யினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Print Friendly, PDF & Email