SHARE

பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் நாட்டில் அமுல்படுத்தப்படின் பயங்கரவாதிகளிடமிருந்து நாட்டை காப்பாற்ற முடியாது என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”தற்போது முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் சாதாரண பொதுமக்களை நசுக்குவதுடன், பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பை வழங்குவதாக அமையும்.

இவ்வாறானதொரு தேசிய ரீதியிலான பேரழிவு ஏற்பட்டுள்ள சந்தர்ப்பத்தில், நாட்டின் நிலைமையை கருத்திற்கொண்டு சர்வதேசத்திற்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டாம் என அரசாங்கத்திடம் கேட்டுக் கொள்கிறோம்.

இச்சந்தர்ப்பத்தில் பயங்கரவாதத் தடை சட்டத்தை நீக்கி பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை அமுல்படுத்தினால் நாட்டை பயங்கரவாதிகளிடமிருந்து காப்பாற்ற முடியாது.

தான்தோன்றித்தனமாக இந்த பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை அமுல்படுத்த நாம் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம்” எனத் தெரிவித்தார்.

Print Friendly, PDF & Email