SHARE

-சிறிதரன் எச்சரிக்கை!

ஊடக சுதந்திரத்தை அரசாங்கம் தடுத்தால், அது பயங்கரமான விளைவுகளை ஏற்படுத்துமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட சிவபுரம் பிரதேச மக்களுக்கான வீட்டுத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (சனிக்கிழமை) காலை இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இங்கு மேலும் தெரிவித்த அவர்,

கடந்த 21ஆம் திகதி இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களின் பின்னர் அரசாங்கத்தால் ஊடகங்களுக்கு பல்வேறு தடைகள் விதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். இது தவறான விடயமென்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஊடகங்கள் தடுக்கப்பட்டால் உண்மையான ஜனநாயகம் வெளிவராது என்றும் தற்போது அரசாங்கத்தால் அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகால விதிகளும் ஊடகங்களை கட்டுப்படுத்துவதற்கான ஒரு சரத்தைக் கொண்டுள்ளதென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவசரகால நீடிப்பு பிரேரணை  நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும்போது அதனை தாம் சவாலுக்கு உட்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Print Friendly, PDF & Email