SHARE

முள்ளிவாய்கால் தமிழ் இனப்படுகொலையின் 10 ஆவது ஆண்டியை முன்னிட்டு பிரித்தானிய பாராளுமன்றில் நடைபெற்ற நினைவு தின நிகழ்வில் சிறிலங்கா அரசின் உளவாளிகள் என அறியப்பட்ட இருவர் கலந்து கொண்டுள்ளனர்.

தமிழ் இனத்திற்கு எதிரான சிங்களப்பேரினவாதம் நிகழ்த்திய மாபெரும் இன அழிப்பின் 10 ஆண்டுகள் அடைந்துள்ள போதிலும் இனியும் காலம் தாழ்த்தாது தமிழர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க பிரித்தானிய அரசு காத்திரமான நடவடிக்கையை எடுக்கவேண்டுமென வலியுறுத்தி பிரித்தானியாவின் தொழிற்கட்சி ஆதரவான தமிழர்களால் பாராளுமன்றில் இன்று முள்ளிவாய்க்கால் நினைவு தின நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

மாலை 6 மணி முதல் 9 மணி வரை நடைபெற்ற இந்நிகழ்வில் பிரிர்தானியாவின் எதிர்க்கட்சி தலைவர் ஜெரமி கோர்பின் உட்பட பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்ட வல்லுனர்கள் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் பொதுமக்கள் என பலர் இதில் கலந்துகொண்டனர்.

இந்நிலையிலேயே, இந்நிகழ்வில் பிரிதானியாவிலுள்ள இலங்கை தூதரகத்தின் ஊழியரும் சிறிலங்கா அரசின் உளவாளியும் என அறியப்பட்ட நபரும் அவருடன் இணைந்த கைக்கூலி ஒருவரும் நிகழ்வில் கலந்து கொண்டதுடன் அங்கு நடைபெற்ற அனைத்து விடயங்களையும் தமது கைத்தொலைபேசியில் பதிவேற்றி சென்றுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Print Friendly, PDF & Email