SHARE

பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னை நீக்கியமைக்கு எதிராக புஜித் ஜயசுந்தர அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்துள்ளார்.

உச்ச நீதிமன்றத்தில் இன்று (புதன்கிழமை) அவர் அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்துள்ளார்.

குறித்த மனுவில் பொலிஸ் மா அதிபர், அரசியலமைப்பு சபை உறுப்பினர்கள், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான தகவல்கள் கிடைக்கப்பெற்றும் அதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை என்பதனால் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பூஜித் ஜயசுந்தர ஆகியோரை பதவியிலிருந்து விலகுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டார்.

இதனை அடுத்து ஹேமசிறி பெர்னாண்டோ பதவி விலகினார். இருந்தபோதும் பூஜித் ஜயசுந்தர பதவி விலகாதமையினை அடுத்து கட்டாய விடுமுறையில் அனுப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Print Friendly, PDF & Email